கடந்த வாரம் அதிக வியூஸ் அள்ளிய வெப் தொடர்கள்.. ஓடிடி பிரியர்களை ஈர்த்த டாப் லிஸ்ட்!
கடந்த வாரம் ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
8. ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வரும் பிரபல வெப் தொடர் 'Splitsvilla'. இத்தொடரின் 16வது சீசன் அதிகப்படியான பார்வையாளர்களை ஈர்த்து 29 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது. கலக்கலான இந்த ரியாலிட்டி ரொமான்டிக் தொடரை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
7. 2024ல் இருந்து ஒளிபரப்பாகி வரும் காமெடி ரியாலிட்டி ஷோ வெப் தொடர் 'Laughter Chefs Unlimited Entertainment'. இத்தொடரின் மூன்றாவது சீசன் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி கடந்த வாரம் மட்டும் 32 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.
6. 2021ல் இருந்து ஒளிபரப்பாகி வரும் ட்ராமா வெப் தொடர் 'Aspirants'. UPSC தேர்வை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இத்தொடரின் மூன்றாவது சீசன் அமேசான் பிரைம் ஓடிடியில் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடர் கடந்த வாரம் மட்டும் 32 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.
5. நானா படேகர், சஞ்சய் கபூர் நடிப்பில் வெளிவந்த திரில்லர் வெப் தொடர் 'Sankalp'. அமேசான் எம்எக்ஸ் பிளேயர் ஓடிடியில் ஒளிபரப்பாகி வரும் இத்தொடர் கடந்த வாரம் மட்டும் 32 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.
4. 2020ல் இருந்து ஒளிபரப்பாகி வரும் மியூசிக்கல் ட்ராமா வெப் தொடர் 'Anupamaa'. இத்தொடரின் முதல் சீசன் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்பாகி கடந்த வாரம் மட்டும் 34 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.
3. ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கலான காமெடி வெப் தொடர் 'Taarak Mehta Ka Ooltah Chashmah'. யூடியூப் மற்றும் சோனி லைவ் ஓடிடியில் ஒளிபரப்பாகி வரும் இத்தொடர் கடந்த வாரம் மட்டும் 36 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.
2. 2015ல் இருந்து ஒளிபரப்பாகி வரும் ஹிந்தி வெப் தொடர் 'Naagin'. ஃபேண்டஸி, மிஸ்ட்ரி ஜானரில் ஒளிபரப்பாகி அமோக வரவேற்பு வரும் இத்தொடரின் 7வது சீசன் கடந்த வாரம் மட்டும் 46 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.
1. ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி வெப் தொடர் 'The 50'. பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்கும் இத்தொடர் கடந்த வாரம் மட்டும் 88 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications