OTT: 'துரந்தர்' படத்திற்கு இணையான.. ஸ்பை, திரில்லர் படம் பார்க்கணுமா? ஓடிடியில் உள்ள டாப் 5 லிஸ்ட் இதோ!
ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் கண்ணா, அர்ஜுன் ராம்பால், சாரா அர்ஜுன், சஞ்சய் தத் ஆகியோர் நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்த மெகா ஹிட் திரைப்படம் 'துரந்தர்'. உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட ஸ்பை, திரில்லர் திரைப்படமாகும். இப்படம் வசூலில் ரூ.1000 கோடியை கடந்து சாதனை படைத்தது. இப்படத்திற்கு இணையான ஸ்பை, திரில்லர் திரைப்படங்கள் என்னென்ன? எந்த ஓடிடியில் பார்க்கலாம்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சைப் அலி கான், கத்ரீனா கைஃப் ஆகியோர் நடிப்பில் 2015ல் வெளிவந்த ஸ்பை, ஆக்ஷன், திரில்லர் திரைப்படம் 'Phantom'. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதியை கொலை செய்ய உளவாளியாக செல்லும் இந்திய ராணுவ அதிகாரியின் கதை. இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.
ஜோகன் ஆப்ரஹாம் நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த ஆக்ஷன், திரில்லர் திரைப்படம் 'Tehran'. 2012 டெல்லி தீவிரவாத தாக்குதலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இப்படத்தை நெட்பிளிக்ஸ் மற்றும் ஜீ5 ஓடிடியில் காணலாம்.
டாப்சீ, அக்ஷய் குமார் நடிப்பில் 2017ல் வெளிவந்த ஆக்ஷன், திரில்லர் திரைப்படம் 'Naam Shabana'. பெண் உளவாளி பற்றிய கதை. இப்படத்தை ஜீ5 மற்றும் அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.
சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிப்பில் 2012ல் வெளிவந்த ஆக்ஷன், ஸ்பை, திரில்லர் திரைப்படம் 'Ek Tha Tiger'. இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் காணலாம்.
சித்தார்த் மல்ஹோத்ரா, ராஷ்மிகா நடிப்பில் 2023ல் வெளிவந்த ஸ்பை, ஆக்ஷன், திரில்லர் திரைப்படம் 'Mission Majnu'. 1970ல் பாகிஸ்தானின் அணு ஆயுத திட்டத்தை இந்திய உளவாளி ரகசியமாக கண்டறிந்து என்ன செய்கிறார் என்பதே இப்படத்தின் கதை. இந்த திரில்லர் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் காணலாம்.


Click it and Unblock the Notifications