bredcrumb

PHOTOS : ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தோல்வியில் முடிந்த தென்னிந்திய படங்கள்..

By Chandru
| Published: Friday, November 25, 2022, 16:04 [IST]
தென்னிந்திய சினிமாவில் சமீபகாலமாக பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பின் அது தோல்வியில் முடிந்துள்ளது.படம் தியேட்டர்களில் வெளிவரும் முன் படத்தின் ட்ரைலர் இணையதளத்தில் படக்குழுவினர் வெளியிடுகின்றனர்.
PHOTOS : ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தோல்வியில் முடிந்த தென்னிந்திய படங்கள்..
1/12

2/12
இணையத்தளத்தில் வெளியாகும் இந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது.ட்ரைலர் பார்த்துவிட்டு ரசிகர்கள் படத்தின் மீது பல மனக்கணக்கை போட்டு வைத்துவிடுகின்றனர்.

PHOTOS : ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தோல்வியில் முடிந்த தென்னிந்திய படங்கள்..
3/12
ஆனால் இது அனைத்து படங்களுக்கும் பொருந்தாது.சில படங்கள் ட்ரைலர் சுமாராக இருந்தாலும் தியேட்டர்களில் பார்க்கும் பொது ஹிட் ஆகிவிடுகிறது.ஆனால் சில படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை சல்லி சல்லியாய் நொறுக்கிவிடுகிறது.இந்த வகையில் மிகவும்  எதிர்பார்க்கப்பட்டு தோல்வியில் முடிந்த படங்கள் எவை எவை என பார்ப்போம்.

PHOTOS : ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தோல்வியில் முடிந்த தென்னிந்திய படங்கள்..
4/12
சயீரா நரசிம்ம ரெட்டி : இயக்குநர் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி மகன் ராம் சரண் தயாரிப்பில் 200 கோடி பட்ஜெட்டில் மிக மிக பிரமாண்டமாய் உருவாக்கப்பட்ட வரலாற்று காவியம்தான் சயீரா நரசிம்ம ரெட்டி திரைப்படம்.

PHOTOS : ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தோல்வியில் முடிந்த தென்னிந்திய படங்கள்..
5/12
இப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்.நயன்தாரா, விஜய்சேதுபதி, தமன்னா, அனுஷ்கா, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பட்சன், கன்னட நடிகர் கிச்சா சுதீப் என பல பிரபலங்கள் நடித்துள்ளார்.இதுவே ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை கூட்டுவதற்கு ஒரு காரணமாக இருந்தது என கூறலாம்.ஆனால் இப்படம் அனைவரின் எதிர்பார்ப்பை சல்லி சல்லியாய் நொறுக்கி தோல்வி படமாக அமைந்தது.

PHOTOS : ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தோல்வியில் முடிந்த தென்னிந்திய படங்கள்..
6/12
பயில்வான் : இயக்குநர் எஸ். கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சுதீப் நடித்து அதிரடி படம் பயில்வான்.50 கோடி செலவில் ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது.ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பை கூட்டிய இப்படம் மிக பெரிய தோல்வியை சந்தித்தது.50 கோடி பட்ஜெட் படமாக எடுக்கப்பட்டு வெறும் 3 கோடி மட்டுமே லாபமாக இப்படம் பெற்றது. 

PHOTOS : ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தோல்வியில் முடிந்த தென்னிந்திய படங்கள்..
7/12
மரக்கர் : மரக்கர் ஒரு மலையாள படமாகும்.இயக்குநர் ப்ரியதர்சன் இயக்கத்தில் நடிகர் மோகன்லால், அர்ஜுன், கீர்த்தி சுரேஷ் ஆகிய பல முன்னணி பிரபலங்கள் நடித்த படம் மரக்கர்.110 கோடி பட்ஜெட்டில் இப்படம் எடுக்கப்பட்டது.ரசிகர்கள் மத்தியில் அதிர்ப்பரப்பை மிகவும் அதிகப்படுத்திய இப்படம் தோல்வியை சந்தித்தது.இப்படத்திற்கு IMBD 5.9 ரேட்டிங் கொடுத்தது.

PHOTOS : ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தோல்வியில் முடிந்த தென்னிந்திய படங்கள்..
8/12
மாமாங்கம் : இயக்குநர் எம். பத்மகுமார் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான படம் மாமாங்கம்.இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மாமூட்டி நடித்துள்ளார்.55 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தோல்வியில் முடிந்தது.

PHOTOS : ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தோல்வியில் முடிந்த தென்னிந்திய படங்கள்..
9/12
லைகர் : இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் தேவர்கொண்ட, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த படம் லைகர்.இப்படத்தின் ட்ரைலரை கண்டு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர், ஆனால் இப்படம் ரசிகர்களுக்கு மிக பெரிய ஏமாற்றத்தையே தந்தது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X