Home / Photos
கைத்தறி, கைவினை பொருட்கள் பிரியரா நீங்க.. சென்னையில் இந்த இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க!
By Divya Bala
சென்னையில் இந்த தீபாவளிக்கு கைவினை பொருட்களை எங்கெங்கு வாங்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
1/8
Photo Credit: AI
Share
பூம்புகார் கைவினை பொருட்கள்: இங்கு தமிழ்நாட்டிற்கே உரித்தான கைவினை பொருட்கள், செம்பு சிலைகள், தஞ்சாவூர் ஓவியங்கள் மற்றும் மரத்தால் ஆன பொருட்கள் கிடைக்கின்றன.
2/8
Photo Credit: AI
Share
காட்டன் ஸ்ட்ரீட்: பந்தேன் ரோடில் உள்ள இந்த சாலையில் காட்டன் துணிகளில் செய்த கைவினை வேலைப்பாடுகள், தீபாவளிக்கு தேவையான துணிகள் என அனைத்தும் கிடைக்கும்.
3/8
Photo Credit: AI
Share
குறளகம்: சென்னை உயர் நீதிமன்றம் அருகில் இருக்க கூடிய இங்கு தமிழ்நாட்டின் நலிவடைந்த கைவினை கலைஞர்கள் உருவாக்கும் மரங்களால் ஆன பொருட்கள், கற்களால் செதுக்கப்பட்டவை மற்றும் இரும்புகளால் செய்யப்பட்ட பொருட்கள் கிடைக்கும்.
4/8
Photo Credit: AI
Share
தக்சன்சித்ரா: முட்டுக்காடு அருகில் உள்ள இந்த இடம் சுற்றுலா பயணிகள் அதிகம் செல்ல கூடிய ஒன்றாகும். இங்கு பலவகையான கைவினை பொருட்கள் கிடைக்கும்.
5/8
Photo Credit: AI
Share
தியாகராஜ நகர்: சென்னையின் முக்கியமான அங்காடிகள் நிறைந்த ஒரு தெருவாகும். இங்கு தீபாவளிக்கு தேவையான அனைத்து பொருட்களையும் அளவான விலையில் வாங்கலாம்.
6/8
Photo Credit: AI
Share
சென்னை டிரேட் சென்டர்: தீபாவளி முன்னிட்டு நடக்கும் இந்த பொருட்காட்சி வீட்டு அழகு பொருட்கள், கைவினை பொருட்கள், வெளி மாநிலத்தின் கலசரம் சார்ந்த பொருட்கள் என பலவற்றை வாங்கலாம்.
7/8
Photo Credit: AI
Share
தி சென்னை கிராஃப்ட் பொருட்காட்சியகம்: தீபாவளி சமயத்தில் போடப்படும் இந்த பொருட்காட்சியில் பல கைவினை கலைஞர்கள் தங்கள் கடைகளை அமைத்திருப்பார்கள். வீட்டுக்கு தேவையான கைகளால் செய்யப்பட்ட பானைகள், ஓவியங்கள், நகைகள் என அனைத்தும் கிடைக்கும்.
8/8
Photo Credit: AI
Share
கல்பதருமா: ஆல்வார்ப்பேட்டையில் உள்ள இந்த இடம் மிகவும் அமைதியான கவித்துவம் வாய்ந்த இடமாக இருக்கும். இங்கு வீட்டுக்கு தேவையான இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மெழுகுவர்த்திகள், மண் பொருட்கள் மற்றும் வீடு அழகு சாதனங்கள் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications