OTT: கதையே ஹீரோ! சினிமா ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய 5 மலையாள படங்கள்!
பெரிய ஹைப் இல்லாமல், கதையாலும் உணர்வுகளாலும் ரசிகர்களை கவர்ந்த 5 அற்புதமான மலையாள படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
Sudani from Nigeria: ஒரு உணர்வுபூர்வமான மலையாள திரைப்படம். நைஜீரிய கால்பந்து வீரருக்கும், அவரை கவனித்துக் கொள்ளும் மஜீத்துக்கும் இடையே உருவாகும் மனிதநேயமும் நட்பும் தான் கதையின் மையம். மனதை வருடும் இந்த படத்திற்கு IMDb-யில் 8.1 ரேட்டிங் உள்ளது. ஆஹா மற்றும் அமேசான் தளங்களில் காணலாம்.
Maheshinte Prathikaaram: ஒரு சிறிய அவமானத்தால் தொடங்கும் கதை, வாழ்க்கை, காதல் மற்றும் தன்னம்பிக்கையை அழகாகச் சொல்கிறது. இயல்பான நடிப்பும், நகைச்சுவையும் நிறைந்த இந்த படத்திற்கு IMDb-யில் 8.3 ரேட்டிங் உள்ளது. தற்போது மனோரமா மேக்ஸில் காணலாம்.
Home: தொழில்நுட்ப உலகில் தன் குடும்பத்துடன் இணைந்து பயணிக்க முயற்சிக்கும் ஒரு அப்பாவின் கதையே ஆகும். அப்பாவாக நடிகர் இந்திரன்ஸ் நடித்துள்ளார். குடும்ப உறவுகளை உணர்வுபூர்வமாகச் சொல்லும் இந்த படத்திற்கு IMDb-யில் 8.8 ரேட்டிங் உள்ளது. அமேசான் பிரைம் தளத்தில் காணலாம்.
Thondimuthalum Driksakshiyum: ஒரு திருட்டு சம்பவத்தை மையமாகக் கொண்டு யதார்த்தமான முறையில் நகரும் இந்த படம், விறுவிறுப்பான திரைக்கதையால் கவனம் பெற்றது. IMDb-யில் 8.0 ரேட்டிங் பெற்றுள்ள இப்படத்தை ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் காணலாம்.
North 24 Kaatham: எதிர்பாராத ஒரு பயணம், ஓசிடி உள்ள ஒருவரின் வாழ்க்கை பார்வையை எப்படி மாற்றுகிறது என்பதைக் கூறும் அழகான படம். IMDb-யில் 7.8 ரேட்டிங் பெற்றுள்ள இந்த படம்மனோரமா மேக்ஸ் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் தளங்களில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications