OTT: பஞ்சதந்திரம் படத்திற்கு இணையான.. ஓடிடியில் பார்க்கவேண்டிய ஃபீல் குட் காமெடி திரைப்படங்கள்.. லிஸ்ட்!
இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்த்து என்ஜாய் பண்ணசவேண்டிய ஃபீல் குட் காமெடி திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
முரளி, வடிவேலு நடிப்பில் 2002ல் வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் 'சுந்தரா டிராவல்ஸ்'. முழுக்க முழுக்க காமெடி காட்சிகள் நிறைந்த மனதை ரிலாக்ஸ் பண்ணும் இந்த ஃபீல் குட் படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
பிரசாந்த், கிரண், வடிவேலு நடிப்பில் 2003ல் வெளிவந்த அதிரடி ஆக்ஷன். கலக்கல் காமெடி, ரொமான்ஸ் நிறைந்த திரைப்படம் 'வின்னர்'. இந்த சூப்பர் ஹிட் ஃபீல் குட் படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
கமல், ஸ்னேகா, பிரபு நடிப்பில் வெளிவந்த தரமான ஃபீல் குட் காமெடி திரைப்படம் 'வசூல் ராஜா எம்பிபிஎஸ்'. எத்தனை முறை பார்த்தாலும் கொஞ்சமும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த காமெடி படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்த்து என்ஜாய் பண்ணுங்க.
கமல், ஜெயராம், ஜோதிகா, தேவயானி ஆகியோர் நடிப்பில் 2000ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'தெனாலி'. கலக்கலான இந்த ஃபீல் குட் காமெடி படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் இந்த வீக் எண்டு பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
பிரபு, வடிவேலு, விவேக், அபிராமி உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடிப்பில் 2001ல் வெளிவந்த ஃபீல் குட் காமெடி திரைப்படம் 'மிடில் கிளாஸ் மாதவன்'. கொஞ்சமும் சலிக்காத காமெடி காட்சிகள் நிறைந்த இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
கமல், சிம்ரன், அப்பாஸ், ஸ்னேகா நடிப்பில் 2002ல் வெளிவந்த கலக்கலான ஃபீல் குட் காமெடி திரைப்படம் 'பம்மல் கே சம்மந்தம்'. க்ரெஜி மோகனின் அசத்தலான வசனத்தில் வெளிவந்த இப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications