OTT: ஓடிடியில் கொண்டாடப்பட்ட லேட்டஸ்ட் மலையாள படங்கள்.. இந்த வீக் எண்டு என்னென்ன படம் பார்க்கலாம்?
இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்த்து ரசிக்கவேண்டிய லேட்டஸ்ட் மலையாள திராய்ப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
மம்மூட்டி, கோகுல் சுரேஷ் நடிப்பில் வெளிவந்த தரமான சஸ்பென்ஸ், திரில்லர் திரைப்படம் 'Dominic and the Ladies' Purse'. ட்விஸ்ட் காட்சிகள் நிறைந்த இப்படத்தை ஜீ5 ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
கலக்கலான காமெடி, திரில்லர், சஸ்பென்ஸ் கதைக்களத்தில் வெளிவந்த திரைப்படம் 'Avihitham'. ஓடிடியில் வேற லெவல் வரவேற்பு பெற்ற இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணலாம்.
ஆசிப் அலி நடிப்பில் வெளிவந்த மிஸ்ட்ரி, திரில்லர் கதைக்களத்தில் வெளிவந்த திரைப்படம் 'Rekhachithram'. இந்த சூப்பர் ஹிட் திரில்லர் படத்தை ஆஹா மற்றும் சோனி லைவ் ஓடிடியில் காணலாம்.
அனஸ்வர ராஜன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த காமெடி மலையாள திரைப்படம் 'Vysanasametham Bandhumithradhikal'. நல்ல வரவேற்பு பெற்ற இந்த காமெடி படத்தை மனோரமா மேக்ஸ் ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.
அர்ஜுன் அசோகன், ரேவதி ஷர்மா நடிப்பில் வெளிவந்த ஃபீல் குட் காமெடி டிராமா திரைப்படம் 'Thalavara'. இளைஞனின் காதல் தேடுதலை பற்றிய கதைக்களம். நல்ல வரவேற்பு பெற்ற இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.
சௌபின் ஷாஹிர் நடிப்பில் வெளிவந்த தரமான திரில்லர் திரைப்படம் 'Pravinkoodu Shappu'. ஓடிடி பிரியர்களை அதிகம் ஈர்த்த இந்த சஸ்பென்ஸ், திரில்லர் படத்தை சோனி லைவ் ஓடிடியில் காணலாம்.


Click it and Unblock the Notifications