OTT: இந்த படங்கள் எல்லாம் உண்மை சம்பவங்களாம்! அப்படியான மலையாள படங்கள் என்னென்ன? எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்த்து ரசிக்கவேண்டிய உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்ட மலையாள திரில்லர் படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2024ல் வெளிவந்த சர்வைவல் திரைப்படம் 'Manjummel Boys'. கொடைக்கானல் குணா குகை பள்ளத்தாக்கில் சிக்கிய நண்பரை காப்பாற்ற சக நண்பர்களின் போராட்டத்தை பற்றிய கதைக்களம். உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2023ல் வெளிவந்த ஆக்ஷன், திரில்லர், இயற்கை பேரழிவு திரைப்படம் '2018'. கேரளா பெரும் வெள்ளத்தை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தை சோனி லைவ் ஓடிடியில் காணலாம்.
ஜோஜு ஜோர்ஜ், விநாயகன் நடிப்பில் 2022ல் வெளிவந்த க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Pada'. இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
ஜெயசூர்யா, சம்யுக்தா மேனன் நடிப்பில் 2021ல் வெளிவந்த பியோகிராஃபி திரில்லர் திரைப்படம் 'Vellam'. இப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணலாம்.
பகத் பாசில் நடிப்பில் 2017ல் வெளிவந்த ஆக்ஷன், திரில்லர் திரைப்படம் 'Take Off'. ஈராக்கில் சிக்கிக்கொண்ட இந்திய செவிலியரின் போராட்டம் தான் இப்படத்தின் கதைக்களம். இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
பிரித்விராஜ் நடிப்பில் 2008ல் வெளிவந்த திரில்லர் திரைப்படம் 'Thalappavu'. போலீஸ் அதிகாரியின் போலி என்கவுண்டர் பற்றிய கதைக்களம். இந்த உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணலாம்.
2011ல் வெளிவந்த ஆக்ஷன், அட்வென்ச்சர், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Traffic'. இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக அம்புலன்ஸ் மூலம் இதயம் ஒரு இடத்தில இருந்து மற்றொரு இடத்திற்கு கொடுள்ளப்படுகிறது. கேரளாவில் நடந்த அந்த உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படமாகும். இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications