சைக்காலஜிக்கலா? ஹாரரா? க்ளைமாக்ஸ் வரை பதட்டம்.. இந்த படத்தை தவறவிடாதீங்க!
2015ல் வெளிவந்த பிரபல வீடியோ கேமை அடிப்படையாகக் கொண்டு உருவான Until Dawn (அன்டில் டவுன்), டேவிட் சாண்ட்பெர்க் இயக்கிய ஹாரர் படம். ரத்தம் தெறிக்கும் காட்சிகள், டைம் லூப், கொலை, அமானுஷியம் என பல பரிமாணங்களில் படமாக்கப்பட்டிருக்கும் இது, 5 நண்பர்கள் கடைசி வரை உயிர் பிழைப்பார்களா என்ற கேள்வியுடன் பீதியில் உறைய வைக்கும். 1மணி நேரம் 43 நிமிடங்களே இருப்பதால் நிச்சயம் உங்களுக்கு விறு விறுப்பான அனுபவத்தை கொடுக்கும்.
அவனிடமிருந்த சாவியை எடுத்துக் கொண்டு, க்ளோவர் மேகனை விடுவிக்கிறாள். மற்ற நண்பர்களும் சேர்ந்து அங்கிருந்து தப்பிக்க போராடும் காட்சிகள் திக் திக் அனுபவத்தை தருகின்றன. ஆரம்பக் காட்சியில் போலவே, மண் நிறைந்த புதைகுழியில் இருந்து கைகள் மட்டும் வெளியில் வரும் போது, க்ளோவர் மற்றும் மேகன் அங்கிருந்து வெளியில் வர முடியாமல் திணறுகிறார்கள்; பின்னால் மிருகங்கள் துரத்திக்கொண்டே இருக்கின்றன. அப்போது மேலிருந்து ஒரு கை க்ளோவரை இழுக்கிறது , அது மேக்ஸ். அவன் க்ளோவரையும், பின்னர் மேகனையும் காப்பாற்றுகிறான். இறுதியில் ஐந்து பேரும் அங்கிருந்து தப்பிக்கிறார்கள். படம் தற்போது நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. தமிழில் கிடைக்கின்றதால் கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய த்ரில்லிங் படம்.


Click it and Unblock the Notifications