OTT: 'தாய் கிழவி' படத்தை போல் காமெடி ட்ராமா படம் பார்க்கணுமா? ஓடிடியில் இந்த டாப் 5 படத்தை மிஸ் பண்ணிடாதீங்க!
ராதிகா சரத்குமார் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த 'தாய் கிழவி' ரசிகர்கள் கூட்டத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் தாய் கிழவி படத்திற்கு இணையான ஓடிடியில் பார்க்கவேண்டிய காமெடி ட்ராமா திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
என். ராகவன் இயக்கத்தில் விமல், லட்சுமி மேனன், ராஜ்கிரண் நடிப்பில் வெளிவந்த காமெடி, ட்ராமா திரைப்படம் 'மஞ்சப்பை'. இந்த ஃபீல் குட் படத்தை ஜீ5 ஓடிடியில் காணலாம்.
சுந்தர் சி இயக்கத்தில் விமல், அஞ்சலி, சிவா, ஓவியா நடிப்பில் வெளியான கலக்கலான காமெடி ட்ராமா திரைப்படம் 'கலகலப்பு'. இப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்த்து என்ஜாய் பண்ணலாம்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சூரி, சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த காமெடி ட்ராமா திரைப்படம் 'கடைக்குட்டி சிங்கம்'. இப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணலாம்.
சிவகார்த்திகேயன், சூரி, பாரதிராஜா உட்பட பல பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்த காமெடி ட்ராமா திரைப்படம் 'நம்ம வீட்டு பிள்ளை'. இப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்த்து என்ஜாய் பண்ணலாம்.
தனுஷ், ராஜ்கிரண் நடிப்பில் வெளிவந்த காமெடி ட்ராமா ஃபீல் குட் திரைப்படம் 'பவர் பாண்டி'. இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் காணலாம்.


Click it and Unblock the Notifications