OTT: தமிழ் சினிமாவின் ரோடு ட்ரிப் திரைப்படங்கள்.. என்னென்ன? எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம்?
இந்த வீக் எண்டு நாட்களில் ஓடிடியில் பார்த்து என்ஜாய் பண்ணவேண்டிய சூப்பரான ரோடு ட்ரிப் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2021ல் வெளிவந்த ரோடு ட்ரிப் திரைப்படம் 'வாழ்'. ஆரவ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் முதன்மை ரோலில் நடித்துள்ளனர். இந்த ஃபீல் குட் படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்கலாம்.
ஜோதிகா, ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன் நடிப்பில் 2017ல் வெளிவந்த ஃபீல் குட் ரோடு ட்ரிப் திரைப்படம் 'மகளிர் மட்டும்'. இப்படத்தை ஆஹா மற்றும் ஜீ5 ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.
மாதவன், ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் 2021ல் வெளிவந்த ஃபீல் குட் ரோடு ட்ரிப் திரைப்படம் 'மாறா'. இப்படத்தை அமேசான் பிரைம், ஆஹா மற்றும் எம்எக்ஸ் பிளேயர் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
கார்த்தி, தமன்னா நடிப்பில் 2010ல் வெளிவந்த ஆக்ஷன், திரில்லர், ரோடு ட்ரிப் திரைப்படம் 'பையா'. இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார், ஆஹா மற்றும் ஜீ5 ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
அபிராமி, அபர்ணா பாலமுரளி, அசோக் செல்வன் நடிப்பில் 2022ல் வெளிவந்த ஃபீல் குட் ரோடு ட்ரிப் திரைப்படம் 'நித்தம் ஒரு வானம்'. இந்த ஃபீல் குட் படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications