Home / Photos
மனதை பதபதைக்கும் இந்த சீரியல் கில்லர் படங்களை பார்த்திருக்கீங்களா? அப்போ மிஸ் பண்ணிடாதீங்க!
By Divya Bala
தொடர் கொலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு பல படங்கள் வெளி வந்துள்ளன. அந்த வகையில் நீங்கள் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய படங்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.
1/7
Share
சைக்கோ: 1960 ஆம் ஆண்டு ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் தயாரித்து இயக்கிய அமெரிக்க திகில் திரைப்படமாகும். ஆரம்ப காலத்தில் வந்த ஒரு சீரியல் கில்லர் படம் இதுவாகும். இந்த படம் அமேசான் பிரைமில் உள்ளது. மிஸ் பண்ணாமல் பார்க்கலாம்.
2/7
Share
தி சைலன்ஸ் ஆஃப் தி லாம்ப்ஸ்: 1991 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க உளவியல் திகில் திரைப்படமாகும். இந்த படத்தின் வெற்றியின் காரணமாக 2வது உருவாக்கப்பட்டது. இந்த படம் அமேசான் பிரைமில் உள்ளது.
3/7
Share
ஹென்றி: போர்ட்ரெய்ட் ஆஃப் எ சீரியல் கில்லர்: 1986 ஆம் ஆண்டு வெளியான ஜான் மெக்நாட்டனால் இயக்கப்பட்டது. இது ஒரு சிறந்த சீரியல் கில்லர் படங்களில் ஒன்றாகும். இந்த படம் அமேசான் பிரைமில் உள்ளது.
4/7
Share
ஸ்க்ரீம்: இந்த படம் 6 பாகங்களாக வெளியாகி வெற்றியை பெற்றது. சீரியல் கில்லர் கதையை மையமாக வைத்து எடுத்த இந்த படம் நெட்பிலிக்ஸ் மற்றும் அமேசான் பிரைமில் உள்ளது.
5/7
Share
ராட்சசன்: விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான இந்த படம் வெளியாகி வெற்றி நடைபோட்டது. தொடர் கொலை செய்யும் கொலைகாரனை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரி என விறு விறுப்பாக அமைக்கப்பட்ட படமாகும். இந்த படம் ஹாட்ஸ்டார் தலத்தில் உள்ளது.
6/7
Share
ஸ்பைடர்: எஸ் ஜே சூர்யாவின் வில்லத்தனத்தை வெளி கொண்டு வந்த இந்த படம் கொலைகளை செய்யும் ஒருவனை தேடி அலைவது என மிஸ் பண்ணாம பார்க்கலாம். இந்த படம் ஜீ 5 தலத்தில் உள்ளது.
7/7
Share
அந்நியன்: விக்ரம் நடிப்பில் சூப்பர் ஹிட் ஆன இந்த படம் லஞ்சம் வாங்குபவர்களை கொலை செய்யும் ஒரு மன நோயாளியை வைத்து சொன்ன படமாகும். இந்த படம் ஜீ 5ல் உள்ளது.


Click it and Unblock the Notifications