OTT: சஸ்பென்ஸ், த்ரில் சம்பவங்கள் நிறைந்த.. டாப் 5 லேட்டஸ்ட் மலையாள படங்கள்.. எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம்?
இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்க்கவேண்டிய லேட்டஸ்ட் மலையாளம் திரில்லர் திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
சுரேஷ் கோபி, அனுபமா நடிப்பில் வெளிவந்த திரில்லர் திரைப்படம் 'J.S.K - Janaki V v/s State of Kerala'. செய்ய குற்றத்திற்காக போலீசில் சிக்கிக்கொள்ளும் அனுபமா, அவரை மீட்க போராடும் வழக்கறிஞர் சுரேஷ் கோபியின் கதை. இப்படத்தை ஜீ5 ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
நிவின் பாலி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரில்லர் மலையாள படம் 'Baby Girl'. குழந்தை கடத்தல் அதனை சுற்றி நடக்கும் த்ரில் சம்பவங்களே இப்படத்தின் கதை. இப்படத்தை சோனி லைவ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
ஷைன் டாம் சாக்கோ நடிப்பில் வெளிவந்த சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம் 'Soothravakyam'. ஒரு போலீஸ்காரர் மாணவர்களுக்கு நல்லது செய்ய போய் அது பல பிரச்சனைகளை கொண்டு வருகிறது. த்ரில் சம்பவங்கள் நிறைந்த இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.
திவ்யா பிள்ளை, ரேபா மோனிகா ஜான், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Dheeram'. ஒரேமாதிரியான கொலை சம்பவங்கள், அதனை விசாரணை செய்யும் போலீசின் த்ரில் கதையே இப்படத்தின் கதைக்களம். இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
ஆசிப் அலி நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த திரில்லர் திரைப்படம் 'Raveendra Nee Evide?'. இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications