சசிகுமாரின் 'மை லார்ட்' பட வசூல் என்ன? 3 நாட்களில் எவ்வளவு?
சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'மை லார்ட்' திரைப்படம் வீக் எண்டு நாட்களில் எவ்வளவு வசூல் செய்தது என்பதை பார்ப்போம்.
சசிகுமார்: தொடர் சரிவுகளை சந்தித்து வந்த சசிகுமார், சமீபகாலமாக வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து வெற்றி கண்டு வருகிறார். குறிப்பாக அயோத்தி படத்தில் இருந்து தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார், சசிகுமார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த 'மை லார்ட்' நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
படக்குழு: இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா ஜே ஆச்சார், குரு சோமசுந்தரம், ஆஷா சரத் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் 'மை லார்ட்'. ஒலிம்பியா பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த வாரம் 13ம் தேதி தியேட்டரில் ரிலீசானது.
கதை என்ன? தீப்பெட்டி கம்பெனியில் வேலை செய்யும் சைத்ராவுக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்படுகிறது. அதனை சரி செய்ய கணவர் சசிகுமார், மருத்துவமனைக்கு அழைத்துச்செல்கிறார். மருத்துவ செலவுகளை சமாளிக்க வட்டிக்கு கடன் வாங்குகிறார். கடனை கொடுத்தவன் பணத்தை திரும்பி கேட்க தரமுடியாமல் தவித்தார் சசிகுமார். கடனை கொடுக்கமுடியவில்லை என்றால் இருவரின் கிட்னியை விற்று கடனை செலுத்துங்கள் என மிரட்டுகிறான்.
பயந்துபோன சசிகுமார், சைத்ரா ஊரை விட்டு ஓடிவிடுகின்றனர். பின்னர் தீப்பெட்டி கம்பெனியில் தீவிபத்து ஏற்பட்டு பலர் உயிரிழக்க சசிகுமார், சைத்ராவின் பெயரை இணைத்து அரசிடம் இருந்து பணம் பெற்றுவிடுகிறார் கடன் கொடுத்தவன். இது தெரிந்த இருவரும் ஊருக்கு வந்த நியாயம் கேட்கின்றனர். ஆனால் நியாயம் கிடைக்காததால் மத்திய அமைச்சர் ஒருவரை சந்தித்து சம்பவத்தை சொல்கின்றனர். அந்த அமைச்சரோ எனக்கு ஒரு கிட்னி கொடுத்தால் உங்களுக்கு பணம் மற்றும் உங்களின் பிரச்சனையை சரி செய்கிறேன் என உறுதியளிக்கிறார். இதை நம்பை செல்லும் இருவருக்கு என்ன ஆனது என்பதே இப்படத்தின் மீதி கதை.
அதிகார வர்க்கத்தால் ஏழை மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகின்றனர் என்பதை கூறும் படமாக இயக்குநர் உருவாக்கியுள்ளார். வழக்கம் போல் வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்த சசிகுமார் வெற்றி கண்டு வருகிறார்.
வசூல்? குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம், வீக் எண்டு நாட்களில் அதாவது கடந்த 3 நாட்களில் சுமார் 1.4 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்ததாக கூறப்படுகிறது. வரும் வாரங்களில் நல்ல வசூல் இருந்தால் குறைந்த பட்ஜெட்டில் சூப்பர் ஹிட்டான படங்களில் இதுவும் ஒன்றாக இணைந்துவிடும். காத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications