bredcrumb

மோடியை வரவேற்க வந்த.. "விநாயகர், ராமர்.." களைகட்டிய கோவை.. கலக்கல் படங்கள்

By Veera Kumaran
| Updated: Friday, February 26, 2021, 08:32 [IST]
மோடியை வரவேற்க வந்த..
1/6
கோதாவரி- காவிரி  இணைப்பு திட்டத்துக்கு பிரதமர் மோடி அனுமதிக்க வேண்டும். நீர்ப்பாசன திட்டங்களுக்கு மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அப்போது கேட்டுக் கொண்டார். கோவையில் நடைபெற்ற பிரமாண்ட வரவேற்பால் பிரதமர் நெகிழ்ந்துவிட்டார்.

மோடியை வரவேற்க வந்த..
2/6
நீர் ஆதார திட்டங்களில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.  சென்னையிலிருந்து தனிவிமானம் மூலம் கோவை சென்ற பிரதமர் நரேந்திர மோடி, 12,400 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.
மோடியை வரவேற்க வந்த..
3/6
கோவை அரசு நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி. எண்ணிலடங்கா திட்டங்களை அள்ளித்தரும் பண்பின் பெட்டகம் பிரதமர் மோடியை வரவேற்கிறேன் என்று துணை முதல்வர் ஓ.பி.எஸ். பேசினார்.
மோடியை வரவேற்க வந்த..
4/6
அரசு விழாவுக்கு பிறகு கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பாஜக தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். கோவையில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர் பங்கேற்றனர்.
மோடியை வரவேற்க வந்த..
5/6
இதன்பிறகு, தனி விமானம் மூலம் கோவை வந்தார் பிரதமர் மோடி. வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. விநாயகர், ராமர், அம்மன் வேடமணிந்த தொண்டர்கள், மோடிக்கு உற்சாக வரவேற்பு வழங்கினர்.
மோடியை வரவேற்க வந்த..
6/6
புதுச்சேரியில் நடைபெறும் பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக பிரதமா் மோடி இன்று வருகை தந்தார். பகல் 11.30 மணிக்கு புதுச்சேரிக்கு வந்த அவா், ஜிப்மா் கலையரங்கில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று, முடிவுற்ற அரசு கட்டடங்களைத் திறந்து வைத்தும், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் துறைமுக விரிவாக்கம் உள்ளிட்ட மத்திய அரசின் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டி வைத்தும் உரையாற்றினார்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X