இபிஎஸ் முதல் சீமான் வரை.. அரசியல் தலைவர்களின் சொத்து மதிப்பு.. எவ்வளவு? முழு விவரம்!
அரசியல் கட்சி தலைவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் ஸ்டாலினின் சொத்து மதிப்பு 7.18 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு 27.67 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
2026 சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மையம் போட்டியிடாது என்றும் கூட்டணி கட்சியான திமுகவுக்கு முழு ஆதரவு கொடுப்பதாகவும் அக்கட்சியின் தலைவர் கமல் தெரிவித்திருந்தார். அதன்படி கமலின் சொத்து மதிப்பு 176 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமியின் சொத்து மதிப்பு 6 கோடியே 12 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.
திமுகவில் இணைந்த பன்னீர்செல்வம் போடிநாயக்கனுர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரின் சொத்து மதிப்பு 28 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
என்டிஏ கூட்டணியில் உள்ள டிடிவி தினகரன், கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார். இவரின் சொத்து மதிப்பு 110 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், திருவற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரின் சொத்து மதிப்பு 39.81 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.
பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் அன்புமணி ராமதாசின் சொத்து மதிப்பு 35 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
சாத்தூரில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனின் சொத்து மதிப்பு 20 கோடியே 76 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications