Netflix OTT Release: காமெடி முதல் ரொமான்டிக் வரை.. இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் என்னென்ன படம் பார்க்கலாம்? லிஸ்ட்!
இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
அசத்தலான காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள அனிமேஷன் வெப் தொடர் 'Mating Season'. அனிமேஷன் பிரியர்களே இத்தொடரை நாளை 22ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
ஜாம்பி படங்கள் எத்தனை பேருக்கு பிடிக்கும்? அப்படியாக இந்த வீக் எண்டு பார்க்கவேண்டிய தரமான திரில்லர் திகில் திரைப்படம் தான் 'This Is Not a Test'. இந்த ஜாம்பி ஹாரர் திரில்லர் படம் நாளை 22ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
கலக்கலான காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'Ladies First'. இப்படம் நாளை 22ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளது.
ஃபேண்டஸி, அட்வென்ச்சர், சயின்ஸ் பிக்ஷன், மிஸ்ட்ரி கதைக்களத்தில் உருவாகியுள்ள ஹாலிவுட் வெப் தொடர் 'The Boroughs'. இத்தொடர் இன்று 21ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகியுள்ளது.
ஹிந்தியில் உருவாகியுள்ள ரியாலிட்டி ஷோ டிவி தொடர் 'Desi Bling'. இத்தொடரின் முதல் சீசன் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசானது.
காமெடி, ரொமான்டிக் கதைக்களத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'Carísima'. இத்தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசானது.
உலக புகழ்பெற்ற கொலம்பியன் கால்பந்து வீரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் பற்றிய டாக்குமெண்டரி திரைப்படம் 'James'. இத்தொடரின் முதல் சீசன் இன்று 21ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகியுள்ளது.


Click it and Unblock the Notifications