Netflix OTT: நெட்பிளிக்ஸ் ஓடிடி ரிலீஸ்.. இந்த வாரம் பார்க்கவேண்டிய திரைப்படங்கள் என்னென்ன? முழு லிஸ்ட்!
இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ரொமான்டிக் ட்ராமா கதைங்கலத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'Love Like a Bike'. இத்தொடரின் முதல் சீசன் நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீசானது.
திகிலான ஹாரர், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Smile 2'. இப்படம் நேற்று 4ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீசானது.
ஹாரர் கதைக்களத்தில் உருவாகியுள்ள ஜப்பானிய திரைப்படம் 'Re/Member : The Last Night'. இந்த திகில் படம் நேற்று 4ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீசானது.
மூன்று சோமாலியா சகோதாரர்கள் பற்றிய திரைப்படம் 'Street Flow 3'. இப்படம் நேற்று 4ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீசானது.
காமெடி, ட்ராமா கதைக்களத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'Vladimir'. இத்தொடர், இன்று 5ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீசானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் 'வித் லவ்'. அனஸ்வர ராஜன் நாயகியாக நடித்துள்ளார். இந்த சூப்பர் ஹிட் படம், நாளை 6ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பெரும் எதிர்பார்ப்புடன் ரிலீசாகவுள்ளது.
ஹிந்தியில் உருவாகியுள்ள ட்ராமா வெப் தொடர் 'Hello Bacchon'. உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இத்தொடர், நாளை 6ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீசாகவுள்ளது.
ஆக்ஷன், சயின்ஸ் பிக்ஷன், திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் 'War Machine'. இப்படம், நாளை 6ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீசாகவுள்ளது.
ரொமான்டிக் ட்ராமா கதைக்களத்தில் உருவாகியுள்ள கொரியன் வெப் தொடர் 'Still Shining'. இத்தொடர், நாளை 6ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications