OTT: நெட்பிளிக்ஸ் ஓடிடி ரிலீஸ் என்ன? இந்த வீக் எண்டில் என்னென்ன படம் பார்க்கலாம்?
இந்த வீக் எண்டு ஓடிடி பிரியர்களை மகிழ்விக்க நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீசாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
வெளிநாடுகளில் கொண்டாடப்படும் ஹாலோவீன் திருவிழாவுக்காக செய்யப்படும் விதவிதமான கேக்குகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள குக்கிங் ரியாலிட்டி வெப் தொடர் Is It Cake? Halloween. இத்தொடர் கடந்த 8ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது.
16வது நூற்றாண்டில் நிகழும் கதைக்களத்தில் உருவாக்கப்பட்ட ஆக்ஷன், அட்வென்ச்சர் மினி வெப் தொடர் Néro the Assassin. இத்தொடர் கடந்த 8ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது.
காமெடி, அட்வென்ச்சர் கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'Caramelo'. வளர்ப்பு நாய்க்கும், உரிமையாளருக்கும் இடையே நடக்கும் சுவாரசிய கதைக்களம். இந்த ஃபீல் குட் படத்தை கடந்த 8ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது.
அசத்தலான காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'Boots'. சூப்பரான இத்தொடர் இன்று 9ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'The Resurrected'. இத்தொடர் இன்று 9ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
சைக்கலாஜிக்கல் திரில்லர், க்ரைம், மிஸ்ட்ரி திரைப்படம் 'Vengeance in the Dreary Night'. இப்படம் இன்று 9ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
மிஸ்ட்ரி, திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'The Woman in Cabin 10'. இப்படம் நாளை 10ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
2017ல் இருந்து ஒளிபரப்பாகி வரும் வெப் தொடர் 'The Chosen'. இத்தொடரின் 5வது சீசன் நாளை 10ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
அனிமேஷன் பிரியர்களை ஈர்த்து வரும் Dr. Seuss's Horton என்ற அனிமேஷன் வெப் தொடரின் இரண்டாவது சீசன் தற்போது வெளியாகியுள்ளது. இத்தொடரின் இரண்டாவது சீசன் நாளை 10ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது.


Click it and Unblock the Notifications