Netflix OTT: இந்த வார நெட்பிளிக்ஸ் ஓடிடி ரிலீஸ்.. என்னென்ன படம் பார்க்கலாம்?
இந்த வாரம் நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2020ல் இருந்து ஒளிபரப்பாகி வரும் ரொமான்டிக் வெப் தொடர் 'Emily in Paris'. இத்தொடரின் 5வது சீசன் இன்று 18ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாகவுள்ளது.
இரு மாபெரும் நடனக்கலைஞர்களை சுற்றி நகரும் ரொமான்டிக் கதை தான் '10 Dance' என்ற ஜாப்பனீஸ் படத்தின் கதைக்களம். இப்படம் இன்று 18ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாகவுள்ளது.
மாபெரும் சுனாமியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கொரியன் சர்வைவல் திரில்லர், சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 'The Great Flood'. இப்படம் நாளை 19ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாகவுள்ளது.
1975ம் ஆண்டின் ஹாலிவுட் திரையுலகை பற்றிய டாக்குமெண்டரி ஹாலிவுட் திரைப்படம் 'Breakdown: 1975'. இப்படம் நாளை 19ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாகவுள்ளது.
கடந்தாண்டு இறுதியில் வெளிவந்த ஆக்ஷன், திரில்லர் ஹாலிவுட் திரைப்படம் 'Relay'. இப்படம் நாளை 19ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாகவுள்ளது.
ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல காமெடி ரியாலிட்டி ஷோ 'The Great Indian Kapil Show'. இத்தொடரின் 5வது சீசன் வரும் 20ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாகவுள்ளது.


Click it and Unblock the Notifications