4 ஆண்டுகளாக பட வாய்ப்பு இல்லை.. ஆனாலும் இன்ஸ்டாவை கலக்கும் சுந்தர்.சி பட நடிகை.. யார் தெரியுமா?
போதிய பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் இயக்குநர் சுந்தர்.சி பட நடிகை இன்ஸ்டாகிராமில் கலக்கி வருகிறார். யார் அவர்? வாங்க பார்ப்போம்.
வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் வருவது போல் நடிகைகளின் சினிமா கேரியரில் ஏற்ற தாழ்வுகள் வருவது வழக்கமே. அதில் சிலர் மீண்டும் பழைய ஃபார்முக்கு வருவார், சிலர் போதுமடா சாமி என திருமண வாழ்க்கைக்குள் என்ட்ரி கொடுத்துவிடுவார். இருப்பினும் வெகு சிலர் மட்டும் மீண்டும் பழைய ஃபார்முக்கு வர அதிகம் போராடுவர். கவர்ச்சி காட்டியாவது பட வாய்ப்புகளை ஈறுத்துவிடலாம் என முயற்சிப்பர். அப்படியாக பட வாய்ப்புக்காக போராடி வரும் நடிகை தான் பூனம் பஜ்வா.
தெலுங்கு சினிமா மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை பூனம் பஜ்வா. தொடர்ந்து கன்னட சினிமாவிலும் என்ட்ரி கொடுத்தார். பின்னர் நடிகர் பிரத்தின் 'சேவல்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக என்ட்ரி கொடுத்தார்.
தமிழில் என்ட்ரியான முதல் படமே இவருக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தது. இளைஞர்கள் கூட்டத்தின் கவனம் ஈர்த்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது. தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை என ஹிட் படங்கள் கொடுத்தார். முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என வெவ்வேறு மொழிகளில் பிஸியாக இருந்த பூனம் பஜ்வாவுக்கு ஒருகட்டத்தில் தமிழில் அளவான படங்கள் மட்டுமே கிடைத்தது. சுந்தர.சி-யின் அரண்மனை, ஜிவி பிரகாஷின் குப்பத்து ராஜா உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி காட்டி நடித்து வந்தார்.
குப்பத்து ராஜா படத்திற்கு பின் மூன்று ஆண்டுகள் இடைவெளிவிட்டு 'குருமூர்த்தி' என்ற படத்தில் இறுதியாக நடித்தார். அதன்பின்னர் இவருக்கு வேறு எந்த மொழியிலும் பட வாய்ப்பு கிடைக்கவில்லை. கிளாமர் காட்டியும் பயனில்லை என்பது போல் பூனம் பஜ்வாவின் முயற்சி வீண் என்பது போல் ஆகிவிட்டது.
பட வாய்ப்பு இல்லை என்றால் என்ன ஃபேன்ஸ் கூட்டத்தை தக்கவைக்கவேண்டுமே அதனால் சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருக்கத் தொடங்கினார். தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்கள் கூட்டத்தை தக்கவைத்து வருகிறார்.
பூனம் பஜ்வா, திரையில் தோன்றி 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்றுவரை பட வாய்ப்புகளுக்காக தவித்து வருகிறார். இருப்பினும் இன்ஸ்டாவில் தொடர்ந்து ஹாட் போட்டோக்களை மட்டும் பகிர்ந்து இணையத்தை தன்வசப்படுத்தி ரசிகர்கள் கூட்டத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் பூனம் பஜ்வா பகிர்ந்த இன்ஸ்டா போட்டோஸ் ரசிகர்கள் கூட்டத்தை அதிகம் ஈர்த்துள்ளது. நீச்சல் உடையில் ஹாட் போட்டோஷூட் நடத்திய போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து இணையத்தளத்தை சூடாகியுள்ளார். பூனம் பஜ்வா, மீண்டும் எப்போது திரைக்கு வருவார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. வாங்க பொறுத்திருந்து பார்ப்போம்.



Click it and Unblock the Notifications