பட வாய்ப்பு இல்லாத பிக் பாஸ் ஷெரின்.. இப்ப என்ன பண்றார் தெரியுமா? கிளிக்ஸ்!
பிக் பாஸ் புகழ் ஷெரின் தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் வாங்க பார்ப்போம்.
தனுஷ் நடிப்பில் வெளிவந்த 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் நாயகியாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் ஷெரின்.
தொடர்ந்து ஜெயா, விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம், பீமா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஷெரினின் முதல் படத்தை தவிர வேறு எந்த படங்களிலும் சொல்லும் அளவுக்கு ஓடவில்லை.
தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வந்தார். ஒருகட்டத்தில் ஷெரினுக்கு மார்க்கெட் குறைந்து பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்த நிலையில் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். அந்நிகழ்ச்சியின் 3வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டார். இதன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்து தனக்கென தனி ஃபேன்ஸ் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார்.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஷெரீனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரே ஒரு பட வாய்ப்பு மட்டும் தான் கிடைத்தது. 'தில் ராஜா' என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார். அதன்பின்னர் வெவ்வேறு எந்த பட வாய்ப்பு இல்லாமல் வெறும் சோசியல் மீடியாக்களில் மட்டும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
பட வாய்ப்பு இல்லாத ஷெரின், சோசியல் மீடியாக்களில் மட்டும் ஆக்ட்டிவாக இருந்து தனது ஃபேன்ஸ் கூட்டத்தை தக்கவைக்க முயற்சித்து வருகிறார். ஷெரினும் விதவிதமான கிளாமர் போட்டோக்களை போஸ்ட் செய்து படவாய்ப்புகளை ஈர்க்க முயற்சித்து தான் வருகிறார், இருந்தும் ஒன்றும் நடக்கவில்லை.
பட வாய்ப்பு இல்லாத ஷெரின், நண்பர்களுடன் வெளிநாடுகளில் சுற்றுலா சென்று வருகிறார். வெவ்வேறு நாடுகளுக்கு வெகேஷன் சென்று வரும் இவர், சமீபத்தில் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்தார். அதன் புகைப்படங்களையும் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஷெரினை பலரும் மறந்திருக்க வாய்ப்பு உண்டு. அந்த வகையில் சமீபத்தில் இவர், பகிர்ந்த இன்ஸ்டா போட்டோஸ் இணையவாசிகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது. பிக் பாஸ் ஷெரினா இவங்க? பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு? பட வாய்ப்பு இல்லனாலும் லைப்பை என்ஜாய் செய்து வாரங்களே என ஷெரினின் இன்ஸ்டா போட்டோக்களுக்கு லைக் மற்றும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications