தியேட்டரில் வெற்றிநடைபோடும் 'நூறு சாமி'.. 3 நாட்களில் செய்த வசூல் என்ன?
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த 'நூறு சாமி' திரைப்படம் 3 நாட்களில் செய்த வசூல் எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஹிட் கூட்டணி: பிச்சைக்காரன் படத்தை இயக்கிய இயக்குநர் சசி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் 'நூறு சாமி'. சசியுடன் விஜய் ஆண்டனி மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளார். ஏற்கனவே ஹிட் கொடுத்த இந்த கூட்டணி மீண்டும் இணைந்தது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
படக்குழு: நாயகனாக விஜய் ஆண்டனி அவருக்கு ஜோடியாக ஸ்வாசிகா நடித்துள்ளார். மேலும் காவ்யா அனில், அருள்தாஸ், முனிஸ்காந்த், பாலாஜி சக்திவேல், வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தர்ஷன் கிர்லோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்துள்ளார்.
கதை சுருக்கம்? உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படமாகும். திருமணமாகி குறுகிய வருடங்களிலேயே கணவனை இழந்த ஸ்வாசிகா, இரண்டு மகன்களை கஷ்டப்பட்டு வழக்கிறார். ஸ்வாசிகாவுக்கு ஒரு நபர் மீது காதல் ஏற்பட மறுமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறார். சிறுவர்களான இருமகன்களும் ஸ்வாசிகா மீது வெறுப்பை வெளிப்படுத்த தனது ஆசையை கனத்த இதயத்துடன் குழிதோண்டி புதைத்துவிடுகிறார்.
பின்னர் இருமகன்களும் வளர்ந்து காதல் செய்யவே அப்போது அம்மாவின் நியாயமான உணர்வை மதித்து ஆசையை நிறைவேற்ற முயற்சிக்கின்றனர். அதன்படி ஸ்வாசிகா விஜய் ஆண்டனியை சந்திக்கிறார். இருவரும் திருமணம் செய்ய ஆசைப்படுகின்றனர். இருமகன்களும் தனது அம்மாவின் ஆசையை நிறைவேற்ற தயாராக ஊர்மக்கள் திருமணத்தை தடுக்க முயற்சிக்கின்றனர். ஏன்? இவர்களின் திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதே படத்தின் கதை.
வசூல்? கடந்த வாரம் தியேட்டரில் ரிலீசான இப்படம், பாசிட்டிவ் விமர்சனங்களுடன் வெற்றிநடைபோட்டு வருகிறது. அந்த வகையில் இப்படம், மூன்று நாட்களில் 5.5 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் வாரங்களில் படத்தின் வசூல் அதிகரித்து லாபத்தை ஈட்டும் என நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications