ஆஸ்கர் விருது வென்ற திரைப்படங்கள் என்னென்ன? எந்த ஓடிடியில் பார்க்கலாம்? பட்டியல்!
2026ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது விழா கடந்த 15ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. அதில், உலகின் வெவ்வேறு மொழி படங்கள் பல்வேறு பிரிவுகளில் விருது வென்று அசத்தியது. அந்த வகையில் ஆஸ்கர் விருது வென்ற திரைப்படங்கள் என்னென்ன? அந்த படங்களை எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது வென்ற திரைப்படம் 'One Battle After Another'. இப்படத்தின் மூலம் சிறந்த நடிகருக்கான விருதையும் லியோனார்டோ டிகாப்ரியோ வென்றுள்ளார். 6 ஆஸ்கர் விருது வென்ற இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்கலாம்.
சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது வென்ற மற்றொரு திரைப்படம் 'Frankenstein'. சைக்கலாஜிக்கல் ஹாரர், ஃபேண்டஸி கதைக்களத்தில் வெளிவந்த இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் காணலாம்.
3 ஆஸ்கர் விருது வென்ற திரைப்படம் 'Sinners'. சிறந்த நடிகர், சிறந்த அசல் திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு ஆகிய பிரிவுகளில் விருது வென்றுள்ளது. இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.
சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை Hamnet பட நடிகை ஜெஸ்ஸி பக்லி வென்றுள்ளார். இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.
சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை Weapons பட நடிகை அமி மடிகன் வென்றுள்ளார். இப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணலாம்.
சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை KPop Demon Hunters திரைப்படம் வென்றுள்ளது. இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் காணலாம்.
சிறந்த சர்வதேச திரைப்படத்திக்கான விருதை Sentimental Value திரைப்படம் வென்றுள்ளது. இது ஒரு நார்வே திரைப்படமாகும். இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.
சிறந்த ஆவண திரைப்படத்திற்கான விருதை Mr. Nobody Against Putin திரைப்படம் வென்றுள்ளது. இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் காணலாம்.


Click it and Unblock the Notifications