OTT: 2025ன் பிரபல வெப் தொடர்கள்.. என்னென்ன? எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
2025ம் ஆண்டின் பிரபலமான வெப் தொடர்கள் என்னென்ன? இந்த வீக் எண்டு எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஹிந்தியில் வெளிவந்த கிரைம் வெப் தொடர் 'Criminal Justice: A Family Matter'. ஓடிடி பிரியர்களால் கொண்டாடப்பட்ட இந்த திரில்லர் தொடரை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்கலாம்.
ஹிந்தியில் வெளிவந்த ஆக்ஷன், காமெடி, கிரைம், திரில்லர் வெப் தொடர் The Family Man. இத்தொடரின் முதல் இரண்டு சீசன் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து மூன்றாவது சீசன் அமேசான் பிரைம் தளத்தில் ரிலீசாகி அமோக வரவேற்பு பெற்றது. 2025ம் ஆண்டின் பாப்புலர் வெப் தொடரில் 9ம் இடத்தை பிடித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் ஹிந்தியில் வெளிவந்த ஆக்ஷன், கிரைம் வெப் தொடர் 'Khakee: The Bengal Chapter'. நேர்மையான போலீஸ் அதிகாரியை கொலை செய்த கேங்ஸ்டர்களை தேடு தேடி வேட்டையாடும் ஐபிஎஸ் அதிகாரியின் கதைக்களம். நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீசான இத்தொடரை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2020ல் இருந்து ஒளிபரப்பாகி வரும் ஹிந்தி வெப் தொடர் 'Special OPS'. இத்தொடரின் இரண்டாவது சீசன் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீசாகி ஓடிடி பிரியர்களை அதிகம் ஈர்த்தது.
ஹிந்தியில் வெளிவந்த ஹாரர், திரில்லர் வெப் தொடர் 'Khauf'. கடந்த ஏப்ரல் மாதம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசான இத்தொடரை இந்த வீக் எண்டு பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
திரில்லர், சஸ்பென்ஸ் மிஸ்ட்ரி, க்ரைம் ஜானரில் ஹிந்தியில் வெளிவந்த வெப் தொடர் 'Mandala Murders'. பாப்புலரான வெப் தொடர்களின் பட்டியலில் 5ம் இடத்தை பிடித்துள்ளது. இத்தொடரை நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2020ல் இருந்து ஒளிபரப்பாகி வரும் காமெடி, டிராமா வெப் தொடர் 'Panchayat'. இத்தொடரின் 4வது சீசன் அமேசான் பிரைம் தளத்தில் ரிலீசாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த பட்டியலில் 4ம் இடத்தை பிடித்துள்ளது.
2020ல் இருந்து ஹிந்தியில் வெளிவந்த வெப் தொடர் 'Paatal Lok'. இத்தொடரின் இரண்டாவது சீசன் அமேசான் பிரைம் தளத்தில் ரிலீசாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த பட்டியலில் 3ம் இடத்தை பிடித்துள்ளது.
ஹிந்தியில் வெளிவந்த கிரைம் வெப் தொடர் 'Black Warrant'. 2025ம் ஆண்டின் பிரபல வெப் தொடர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications