OTT: 2025ம் ஆண்டின் சிறந்த திரில்லர் திரைப்படங்கள்.. என்னென்ன? எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
2025ம் ஓடிடியில் கொண்டாடப்பட்ட திரில்லர் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ நடிப்பில் வெளிவந்த ஆக்ஷன், கிரைம், திரில்லர் திரைப்படம் 'One Battle After Another'. இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.
சைக்கலாஜிக்கல் ஹாரர், சைக்கலாஜிக்கல் திரில்லர், சயின்ஸ் பிக்ஷன், சர்வைவல் திரைப்படம் 'The Long Walk'. இந்த திரில்லர் படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் கூடியவிரைவில் எதிர்பார்க்கலாம்.
பள்ளிப்பேருந்தில் பயணித்த 22 பள்ளிச்சிறுவர்களை காப்பாற்றிய பள்ளிப்பேருந்து ஓட்டுநர் மற்றும் ஆசிரியர் ஒருவரின் உண்மை கதை தான் 'The Lost Bus' படத்தின் கதைக்களம். இந்த பயோகிராஃபி படத்தை ஆப்பிள் டிவி ஓடிடி தளத்தில் காணலாம்.
மிஸ்ட்ரி, திரில்லர் கதைக்களத்தில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் 'Drop'. இந்த திரில்லர் படத்தை ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5 மற்றும் அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.
சைக்கலாஜிக்கல் திரில்லர், சயின்ஸ் பிக்ஷன், டார்க் காமெடி திரைப்படம் 'Companion'. அசத்தலான இந்த திரில்லர் படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.
ஆக்ஷன், அட்வென்ச்சர், சயின்ஸ் பிக்ஷன், திரில்லர் கதைக்களத்தில் வெளிவந்த ஏலியன் திரைப்படம் 'Predator: Badlands'. கடந்த நவம்பர் மாதம் தியேட்டரில் ரிலீஸாகி நல்ல வரவேற்பு பெற்ற இந்த திரில்லர் படத்தை கூடியவிரைவில் அமேசான் பிரைம் தளத்தில் எதிர்பார்க்கலாம்.
சைக்கலாஜிக்கல் திரில்லர், மிஸ்ட்ரி, ரொமான்டிக் கதைக்களத்தில் உருவான ஸ்பை திரைப்படம் 'Black Bag'. உளவாளிகளாக இருக்கும் கணவன் மனைவி உறவுக்குள் ஏற்படும் சிக்கல்கள் என்ன?, திருமண உறவுக்கு உண்மையாக இருக்கிறார்களா? நாட்டிற்கு உண்மையாக இருக்கிறார்களா? என்பதை பற்றிய சுவாரசியம் நிறைந்த கதைக்களமாகும். இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5 மற்றும் அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.
காமெடி, கிரைம், திரில்லர், டார்க் காமெடி திரைப்படம் 'No Other Choice'. சில வருடங்களாக வேலை இல்லாமல் இருந்து வந்த ஹீரோவுக்கு ஒரு வேலை கிடைக்க அதனை தக்கவைக்க எப்படி போராடுகிறார் என்பதே இப்படத்தின் சுவாரசியமான கதைக்களம். மக்களின் அமோக வரவேற்பு பெற்ற இப்படத்தை, MUBI ஓடிடி தளத்தில் கண்டு ரசிக்கலாம்.
சைக்கலாஜிக்கல் திரில்லர், பயோகிராஃபி திரைப்படம் 'Nuremberg'. இரண்டாம் உலகப்போரில் முக்கிய பொறுப்பில் இருந்த மனநல மருத்துவரின் செயல்பாடுகளை பற்றிய த்ரில்லான திரைப்படமாகும். தரமான இந்த திரில்லர் படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.


Click it and Unblock the Notifications