OTT Clicks: மர்மங்கள் நிறைந்த கிராமம்.. சிக்கி சின்னாபின்னமாகும் போலீஸ் அதிகாரிகள்.. மிரட்டலான இந்த திரில்லர் படத்தை பாத்துருக்கீங்களா?
தரமான திரில்லர் படங்களின் மூலம் சினிமா ரசிகர்களை ஈர்க்க மலையாள சினிமா ஒருபோதும் தவறியதில்லை. விதவிதமான வித்தியாசமான வெவ்வேறு திரில்லர் படங்கள் இருக்கும் போது சூப்பரான த்ரில் படத்தை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் செம்பன் வினோத், வினய் ஃபோர்ட், ஜோஜு ஜோர்ஜ், சௌபின் ஷாஹிர் உள்ளிட்டோர் நடிப்பில் 2021ல் வெளிவந்த திரைப்படம் 'சுருளி'. சிறுகதையை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்ட படமாகும். வாங்க இந்த படத்தை பற்றி பார்ப்போம்.
கதை? குற்றவாளி ஒருவனை கண்டுபிடிக்க இரண்டு போலீஸ் அதிகாரிகள் ரகசியமாக பணியமர்த்தப்படுகின்றனர். குற்றவாளியை கண்டுபிடிக்க சுருளி என்ற மர்ம கிராமத்திற்கு இருவரும் செல்கின்றனர். அந்த கிராமத்திற்கு சென்றதும் டைம் டிராவல் என்று சொல்லிவிடாமுயது இருப்பினும் ஒரு புது உலகத்திற்குள் ஈர்க்கப்படுகின்றனர்.
அந்த விசித்திரமான கிராமத்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் வித்தியாசமாகவும், விசித்திர குணாதிசயம் கொண்டவர்களாக உள்ளனர். குற்றவாளியை கண்டுபிடிக்கப்போய் புது வித உலகத்தில் சிக்கிக்கொண்ட இரண்டு போலீஸ் அதிகாரிகள் அந்த உலகத்தில் இருந்து மீண்டு வந்தார்களா? இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.
வித்தியாசமான காட்சியமைப்பு, சயின்ஸ் பிக்ஷன் திரைக்கதை, கொஞ்சம் அங்கும் இங்கும் காமெடி என படம் சுவாரசியம் நிறைந்ததாக உள்ளது. சுவாரசியமான த்ரில் காட்சிகள் நிறைந்த இப்படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பதை பார்ப்போம்.
சூப்பரான ஃபேண்டஸி, திரில்லர், மிஸ்ட்ரி கதைக்களத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற 'சுருளி' திரைப்படத்தை சோனி லைவ் ஓடிடியில் பார்க்கலாம். மக்களே பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications