OTT: 'காந்தா' படத்திற்கு இணையான.. ஓடிடியில் உள்ள துல்கர் சல்மான் திரைப்படங்கள்!
இந்த வாரம் ஓடிடி தளத்தில் பார்த்து ரசிக்கவேண்டிய துல்கர் சல்மான் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
துல்கர் சல்மான், விநாயகன் நடிப்பில் 2016ல் வெளிவந்த ஆக்ஷன், க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Kammatti Paadam'. விறுவிறுப்பு குறையாத இந்த த்ரில் படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா நடிப்பில் 2018ல் வெளிவந்த தெலுங்கு திரைப்படம் 'Mahanati'. ஜெமினி கணேஷன் கதாபாத்திரத்தில் துல்கர் நடித்துள்ளார். இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
துல்கர் சல்மான் நடிப்பில் 2021ல் வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் 'Kurup'. உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த க்ரைம், திரில்லர் படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்த்து ரசிக்கலாம்.
துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா நடிப்பில் 2022ல் வெளிவந்த ரொமான்டிக் சஸ்பென்ஸ் மிஸ்ட்ரி திரில்லர் திரைப்படம் 'Sita Ramam'. இப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த திரில்லர் திரைப்படம் 'லக்கி பாஸ்கர்'. இப்படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்த்து ரசிக்கலாம்.


Click it and Unblock the Notifications