OTT: ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5, சன் நெக்ஸ்ட் ஓடிடி ரிலீஸ்.. இந்த வார ரிலீஸ் என்னென்ன? லிஸ்ட்!
இந்த வாரம் ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5, சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ள திரைப்படங்கள், வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஹிந்தியில் வெளிவந்த எமோஷனல் டிராமா வெப் தொடர் 'Shabad : Reet aur Riwaaz'. கால்பந்து வீரராக வேண்டும் என இளைஞன் ஒருவன் ஆசைப்படுகிறான். ஆனால் அவரின் தந்தை அவன் ஒரு பாடகனாக மாறவேண்டும் என்று கூறுகிறார். இளைஞனின் ஆசை என்ன ஆனது என்பதே இத்தொடரின் கதைக்களம். இத்தொடர் நாளை 6ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
நடிகர் மகேந்திரன், ராம்கி நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த ஆக்ஷன் திரைப்படம் 'Nilakanta'. இப்படம் நாளை 6ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது. தமிழ் மொழியிலும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இசை கலந்த த்ரில்லர் வெப் சீரிஸ் 'Jazz City'. இத்தொடர் சோனி லைவ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த பிரமாண்ட திரைப்படம் 'The Raja Saab'. தெலுங்கில் வெளிவந்த இப்படம் நாளை 6ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு ரிலீஸான திரைப்படம் 'பராசக்தி'. இப்படம் வரும் 7ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ளது.


Click it and Unblock the Notifications