OTT: காந்தாராவை பின்னுக்கு தள்ளிய ஜான்வி கபூர் படம் .. ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய திரைப்படங்களின் லிஸ்ட்!
கடந்த வாரம் ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய திரைப்படங்கள் என்னென்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கடந்த வாரம் அதிக வியூஸ் அள்ளிய திரைப்படங்களின் பட்டியலில் 5ம் இடத்தில் மலையாளத்தில் வெளிவந்த 'Dies Irae' திரைப்படம் உள்ளது. ஹாரர், திரில்லர் கதைக்களத்தில் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளிவந்த இப்படம், கடந்த வாரம் 12 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.
ராஷ்மிகா நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த ரொமான்டிக் திரைப்படம் 'The Girlfriend'. தியேட்டரில் நல்ல வரவேற்பு பெற்ற இப்படம், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் எதிர்பார்ப்புடன் ரிலீசானது. அந்த வகையில் இப்படம், கடந்த வாரம் 14 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.
டாம் குரூஸ் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் ஹாலிவுட் திரைப்படம் 'Mission: Impossible - The Final Reckoning'. உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்ற இப்படம், அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது. இப்படம், கடந்த வாரம் 16 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.
காந்தாரா படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து இரண்டாம் பாகமான 'காந்தாரா சாப்டர் 1' ரிலீசாகி அமோக வரவேற்பு பெற்றது. பெரும் எதிர்பார்ப்புடன் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசான இப்படம், கடந்த வாரம் 20 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.
வருண் தவான், ஜான்வி கபூர் நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்த காமெடி ரொமான்டிக் திரைப்படம் 'Sunny Sanskari Ki Tulsi Kumari'. நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீசான இப்படம், கடந்த வாரம் மட்டும் 24 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications