OTT: மம்மூட்டியின் கண்ணூர் ஸ்குவாட் பிடிக்குமா? அப்போ ஓடிடியில் இந்த படங்களை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க!
இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்த்து ரசிக்கவேண்டிய தரமான சஸ்பென்ஸ், திரில்லர் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதவிவில் பார்ப்போம்.
நடிகர் வெற்றி, நடிகை அபர்ணா பாலமுரளி நடிப்பில் 2017ல் வெளிவந்த திரைப்படம் '8 தோட்டாக்கள்'. துப்பாக்கியை தொலைத்த போலீஸ் அதிகாரி அதனை தேடி கண்டுபிடிக்க பெரிதும் முயற்சிக்கிறார். ஆனால் அந்த துப்பாக்கி கொலையாளி ஒருவனிடம் கிடைக்க அவன் என்னென்ன செய்தார் என்பதே இப்படத்தின் கதைக்களம். இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஜீ5 ஓடிடியில் காணலாம்.
2023ல் வெளிவந்த க்ரைம், த்ரில்லர் திரைப்படம் 'Case 30'. கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியின் த்ரில் விசாரணையே இப்படத்தின் சஸ்பென்ஸ் நிறைந்த கதைக்களம். இப்படத்தை ஆஹா ஓடிடியில் காணலாம்.
2022ல் வெளிவந்த க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Paappan'. கேரளா போலீஸ் அதிகாரிகளின் கொலை வழக்கு விசாரணை பற்றிய கதைக்களம். இப்படத்தை ஜீ5 ஓடிடியில் காணலாம்.
மம்மூட்டி நடிப்பில் 2014ல் வெளிவந்த ஆக்ஷன், க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Gangster'. அசத்தலான இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை அமேசான் பிரைம் ஓடிடியல் காணலாம்.
2018ல் வெளிவந்த க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Street Lights'. குற்றப்பிரிவு போலீசார் ஒரு மர்ம கொலை வழக்கை கண்டுபிடிக்கும் முயற்சித்தியின் போது எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன என்பதை இப்படத்தின் கதைக்களம். இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணலாம்.


Click it and Unblock the Notifications