OTT: 'டிமான்டி காலனி' பிடிக்குமா? அப்போ ஓடிடி-யில் இந்த டாப் 7 லேட்டஸ்ட் ஹாரர் படத்தை மிஸ் பண்ணிடாதீங்க!
இந்த வீக் எண்டில் ஓடிடியில் பார்க்கவேண்டிய த்ரில்லான ஹாரர் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
Abigali: கடந்தாண்டு வெளியான அசத்தலான ஹாரர் திரைப்படம் Abigali. பேய் பிடித்த சிறுமி என்னவெல்லாம் செய்கிறார் என்பதே இப்படத்தின் த்ரில்லான கதைக்களம். இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஜீ5 ஓடிடியில் காணலாம்.
Longlegs: கடந்தாண்டு வெளியான சைக்கலாஜிக்கல் திரில்லர், ஹாரர், க்ரைம், சீரியல் கில்லர் திரைப்படம் Longlegs. சைக்கோ கொலையாளியை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரி, வெளிவரும் உண்மைகள் ஒவ்வொன்றும் திகிலடைய செய்யும். இப்படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் காணலாம்.
The Watchers: கடந்தாண்டு வெளியான சஸ்பென்ஸ், மிஸ்ட்ரி, ஹாரர், திரில்லர் திரைப்படம் The Watchers. அடர்ந்த காட்டில் உள்ள பெரிய வீட்டில் மாட்டுக்கொள்ளும் மூன்று பேர் அமானுஷிய சக்திகளின் பிடியில் மாட்டிக்கொள்கின்றனர். இந்த த்ரில்லான ஹாரர் படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணலாம்.
The Monkey: கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ஹாரர் திரைப்படம் The Monkey. அந்த பொம்மைய பார்த்தாலே பயமா இருக்கு என்று சொலவ்து போல் படம் முழுக்க திகிலான ஹாரர் காட்சிகள் தான். இப்படம் வரும் ஜூலை மாதம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Heretic: கடந்தாண்டு வெளியான சைக்கலாஜிக்கல் ஹாரர், திரில்லர் திரைப்படம் Heretic. அடையாளம் தெரியாத நபர் ஒருவருடன் cat and mouse என்ற விளையாட்டை விளையாடும் இரண்டு இளம் பெண்கள் பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர், இறுதியில் என்ன ஆனது என்பதே இப்படத்தின் திகிலான கதைக்களம். இப்படத்தை அமேசான் பிரைம் தளத்தில் காணலாம்.
Cuckoo: ஹாரர், மிஸ்ட்ரி, திரில்லர் ஜெனரல் வெளியான திரைப்படம் Cuckoo. 17 வயது இளைஞன் ஒருவன் குடும்பத்துடன் ரிசார்ட் ஒன்றில் தாக்கியபோது எதிர்கொள்ளும் திகில் காட்சிகளே இப்படத்தின் கதைக்களம். இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணலாம்.
சப்தம்: மூணாறில் உள்ள மருத்துவ கல்லூரியில் இரண்டு ஆசிரியர்கள் தற்கொலை செய்துவிடுகின்றனர், எதனால் தற்கொலை செய்துகொண்டனர் என்பதை கண்டுபிடிக்க பேய் ஆராய்ச்சியாளரை வரவழைக்கின்றனர், அதன் பின்னர் என்ன நடந்தது என்பதே இப்படத்தின் த்ரில்லிங் கதைக்களம். இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.


Click it and Unblock the Notifications