Home / Photos
OTT: ப்ரேமம் படம் பிடிக்குமா? அப்போ ஓடிடி-யில் இந்த டாப் 5 படத்தை மிஸ் பண்ணிடாதீங்க!
By Chandru
நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் மலையாள திரைப்படம் ப்ரேமம். மலையாளத்தில் ஹிட்டான இப்படம் தமிழ் சினிமா ரசிகர்களும் அதிகம் கவர்ந்தது. குறிப்பாக அப்படத்தில் வரும் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரம் செம பாப்புலர் ஆனது. இதன் மூலம் சாய் பல்லவி மிகவும் பிரபலமானார். இப்படியாக இளைஞர்களை அதிகம் ஈர்த்த இப்படத்தை போல் இருக்கும் படங்கள் என்னென்ன? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
Photo Credit: IMDB
Share
Jo and Jo: அருண் டி. ஜோஸ் இயக்கத்தில் 2022ல் வெளியான மலையாள திரைப்படம் Jo and Jo. நடிகை நிகிலா விமல் நடிப்பில் காமெடி, ஆக்ஷன் கதைக்களத்தில் வெளியான இப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணலாம். இந்த வீக் எண்டுக்கு உங்க குடும்பத்துடன் சேர்ந்து பார்த்து ரசிக்க ஏற்ற படமாகும்.
2/5
Photo Credit: IMDB
Share
100 days of love: துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிப்பில் கடந்த 2015ல் வெளியான மலையாள திரைப்படம் 100 days of love. காமெடி மற்றும் ரொமான்ஸ் கதைக்களத்தில் வெளியான இந்த சூப்பரான படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணலாம். இந்த வீக் எண்டில் உங்கள் காதலியுடன் சேர்ந்து பார்க்க செம சூப்பராக இருக்கும்.
3/5
Photo Credit: IMDB
Share
Aanandam: 2016ல் வெளியான ரொமான்டிக் மலையாள திரைப்படம் Aanandam. கல்லூரி மாணவர்களின் காமெடி, காதல், அட்வென்ச்சர் காட்சிகள் நம்மை கல்லூரி பருவத்துக்கே கொண்டுச் செல்லும். சூப்பரான இந்த படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
4/5
Photo Credit: sony liv
Share
Journey of love 18+: கடந்தாண்டு வெளியான ரொமான்டிக் மலையாள திரைப்படம் Journey of love 18+. காதலர்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளை காமெடியாகவும், ரொமான்டிக்காகவும் இயக்குநர் அருண் டி. ஜோஸ் இயக்கியுள்ளார். இப்படத்தை சோனி லைவ் ஓடிடி தளத்தில் பார்த்து ரசிக்கலாம்.
5/5
Photo Credit: IMDB
Share
Qalb: கடந்த ஜனவரி மாதம் தியேட்டரில் ரிலீஸான ரொமான்டிக் மலையாள திரைப்படம் Qalb. காதலின் 7 பரிணாமத்தை இப்படத்தின் மூலம் காணலாம். இப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடி பார்த்து ரசிக்கலாம்.


Click it and Unblock the Notifications