Home / Photos
OTT: 'விலங்கு' வெப் தொடர் பிடிக்குமா? இந்த வீக் எண்டில் ஓடிடி-யில் பார்க்கவேண்டிய.. டாப் 5 மிஸ்ட்ரி வெப் சீரிஸின் சூப்பர் லிஸ்ட்!
By Chandru
விமல் நடிப்பில் கடந்த 2022ல் வெளியான மிஸ்ட்ரி, திரில்லர் வெப் தொடர் விலங்கு. மர்ம கொலைகளை ஒவ்வொன்றாக கண்டுபிடிக்கும் காவல்துறையின் த்ரில்லிங் காட்சிகளே இத்தொடரின் அசத்தலான கதைக்களம். எதிர்பார்த்திடாத சஸ்பென்ஸ் காட்சிகள் ஒவ்வொன்றும் நம்மை வியப்பில் மூழ்கடிக்கும். அந்தவகையில் விலங்கு வெப் தொடரை போல் இருக்கும் த்ரில்லிங், சஸ்பென்ஸ் நிறைந்த வெப் தொடர்கள் என்னென்ன? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
Photo Credit: IMDB
Share
1000 Babies: கடந்த ஆக்டொபர் மாதம் வெளியான க்ரைம், திரில்லர் வெப் தொடர் 1000 Babies. த்ரில்லிங் மற்றும் மிஸ்ட்ரி காட்சிகள் நிறைந்த இந்த வெப் தொடரை இந்த வீக் எண்டில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2/5
Photo Credit: IMDB
Share
Menaka: 2019ல் வெளியான திரில்லர் வெப் தொடர் Menaka. தொடர் கொலைகளை அரங்கேற்ற நினைக்கும் கொலையாளியை கண்டுபிடிக்க போராடும் காவல்துறையின் தேடுதல் வேட்டையே இத்தொடரின் மிஸ்ட்ரி கதைக்களம். இந்த வெப் தொடரை மனோரமா மற்றும் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் பார்த்து ரசிக்கலாம்.
3/5
Photo Credit: IMDB
Share
Manvat Murders: கடந்த அக்டொபர் மாதம் வெளியான க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் வெப் தொடர் Manvat Murders. 1972ம் ஆண்டு நடந்த கொடூர கொலையை மையப்படுத்தி இத்தொடர் எடுக்கப்பட்டுள்ளது. இந்த அசத்தலான வெப் தொடரை சோனி லீவ் ஓடிடி தளத்தில் மிஸ் பண்ணிடாதீங்க.
4/5
Photo Credit: IMDB
Share
Delhi crime: 2019ல் வெளியான க்ரைம், திரில்லர் வெப் தொடர் Delhi crime. நிர்பயா கொலை வழக்கை மையப்படுத்தி இந்த தொடர் எடுக்கப்பட்டுள்ளது. இந்த தொடரை நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம்.
5/5
Photo Credit: IMDB
Share
ASUR: 2020ல் வெளியான க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் வெப் தொடர் ASUR. இந்த த்ரில்லிங் வெப் தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் பார்க்க மறந்துடாதீங்க.


Click it and Unblock the Notifications