OTT: ரிலீஸானது சூரியின் 'மாமன்'.. இதற்கு முன் பார்க்கவேண்டிய டாப் 5 செண்டிமெண்ட் திரைப்படங்கள்.. எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
சூரி கதாநாயகனாக நடித்து வெளியான குடும்ப திரைப்படம் 'மாமன்'. செண்டிமெண்ட் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் இன்று தியேட்டரில் ரிலீஸாகி குடும்ப ஆடியன்ஸை அதிகளவு ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வீக் எண்டில் தியேட்டருக்கு போய் 'மாமன்' படம் பார்ப்பதற்கு முன் ஓடிடியில் பார்க்கவேண்டிய டாப் 5 செண்டிமெண்ட் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கவின் நடிப்பில் 2023ல் வெளியான திரைப்படம் 'டாடா'. கல்லூரியில் காதலித்து வந்த காதல் ஜோடியின் எல்லைமீறி பழக்கத்தால் காதலி கற்பமாகிவிடுகிறார். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறு திருமணம் செய்துகொண்டு தனியாக வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தனர். காதலனின் பொறுப்பேற்ற செயலில் குழந்தையை பெற்று மருத்துவமனையிலேயே விட்டு ஓடிவிடுகிறார் காதலி. அந்த குழந்தையை காதலன் தனி ஒரு ஆளாக எப்படி வளர்க்கிறார்? அதன்பின்னர் வரும் சுவாரசியங்கள் இப்படத்தின் கதைக்களம். இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.
இயக்குநர் ராம் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் 2018ல் வெளியான திரைப்படம் 'பேரன்பு'. தனி ஒரு ஆளாக பெண் குழந்தையை வளர்க்கும் தந்தையின் கதையே இப்படத்தின் செண்டிமெண்ட் கதைக்களம். இப்படத்தை அமேசான் பிரைம் தளத்தில் காணலாம்.
சசிகுமார் நடிப்பில் 2016ல் வெளியான திரைப்படம் 'வெற்றிவேல்'. சகோதரர்கள் செய்யும் தவறினால் ஒரு இளம்பெண்ணின் குடும்பம் பாதிக்கப்படுகிறது, இதனால் வரும் பிரச்சனைகள் என்னென்ன என்பதே இப்படத்தின் கதைக்களம். இப்படத்தை ஜீ5 ஓடிடியில் காணலாம்.
கடந்த மார்ச் மாதம் ரிலீஸான திரைப்படம் 'நிறம் மாறும் உலகில்'. நான் லீனியர் செண்டிமெண்ட் கதைக்களத்தில் வெளியான இப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
கார்த்தி, சூரி நடிப்பில் 2018ல் வெளியான செண்டிமெண்ட் திரைப்படம் 'கடைக்குட்டி சிங்கம்'. படத்தின் கிளைமேக்ஸ் காட்சி நம்மை தேம்பித் தேம்பி அழ வைத்துவிடும். இப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணலாம்.


Click it and Unblock the Notifications