ஹாரர் படம் யாருக்கு தான் பிடிக்காது.. அது ஒரு தனி அனுபவம் என்றே சொல்லலாம். அதிலும் தமிழ் ஹாரர் படம் என்றால் கொஞ்சம் காமெடியும் கலந்து இருக்கும். அந்த வகையில் இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்க்கவேண்டிய தரமான திகில் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/2
OTT: நொடிக்கு நொடி திகில்.. சஸ்பென்ஸ் காட்சிகளுக்கு பஞ்சமே இல்லாத.. இரண்டு தமிழ் ஹாரர் படங்கள்.. எந்த ஓடிடி? | Ott Must Watch Tamil Horror Movies On Ott - Oneindia Tamil/photos/ott-must-watch-tamil-horror-movies-on-ott-oi123576.html
Photo Credit: IMDB
Share
சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் 2017ல் வெளிவந்த திரைப்படம் 'அவள்'. கதை? ஹாலிவுட் பேய் வரக்கூடிய படம் என்றே சொல்லலாம். சித்தார்த், ஆண்ட்ரியா இருவரும் திருமணம் செய்துகொண்டு புது வீட்டில் குடியேறுகின்றனர். ஆரம்பத்தில் ஸ்மூத்தாக சென்றுகொண்டிருந்த இவர்களின் திருமண வாழ்க்கைக்குள் சில திருப்பங்கள் நடக்கிறது. அந்த புது வீட்டில் பல மர்மமான நிகழ்வுகள், திடுக்கிடும் சம்பவங்கள் நடைபெறுகிறது. அதன்பின்னர் இருவருக்கும் என்ன ஆனது என்பதே இப்படத்தின் திகில் கதைக்களம். சஸ்பென்ஸ் மற்றும் திகில் காட்சிகளுக்கு பஞ்சமில்லாத இப்படத்தை யூடியூப் தளத்தில் காணலாம்.
2/2
OTT: நொடிக்கு நொடி திகில்.. சஸ்பென்ஸ் காட்சிகளுக்கு பஞ்சமே இல்லாத.. இரண்டு தமிழ் ஹாரர் படங்கள்.. எந்த ஓடிடி? | Ott Must Watch Tamil Horror Movies On Ott - Oneindia Tamil/photos/ott-must-watch-tamil-horror-movies-on-ott-oi123576.html#photos-1
Photo Credit: IMDB
Share
2022ல் வெளிவந்த திகில் திரைப்படம் 'பூச்சாண்டி'. கதை? தமிழ்நாட்டில் இருந்து மலேசியாவுக்கு செல்லும் திகில் பிரியரான பத்திரிகையாளர் ஒருவர், அங்கு தனது நண்பர்கள் வீட்டில் தங்குகிறார். அந்த நண்பர்கள் குழு ஏற்கனவே சில மர்மமான நிகழ்வுகளை பார்த்துள்ளனர். அதனை பத்திரிகையாளரிடம் கூற, அவர் அதனை ஆராய முயற்சிக்கிறார். சும்மா இருந்த பேயை உசுப்பேத்தி அதனிடம் மாட்டிக்கொள்கின்றனர். ஏன் அந்த பேய் வந்தது? நண்பர்கள் குழுவுக்கும் அந்த பேய்க்கும் என்ன சம்மந்தம்? உள்ளிட்ட பல கேள்விகளால் நிறைந்த திகில் திரைப்படமாகும். இப்படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் காணலாம்.