Home / Photos
OTT: ஓடிடி-யில் பார்க்கவேண்டிய.. தமிழ் சினிமாவின் மணி ஹெய்ஸ்ட் திரைப்படங்களின் லிஸ்ட்!
By Chandru
மணி ஹெய்ஸ்ட் படமுனா ஹாலிவுட் மட்டும் தானா? ஏன் நம்ம தமிழ் சினிமாவில் மணி ஹெய்ஸ்ட் படமே இல்லை என்று கேட்பவர்களுக்கு தான் இந்த பதிவு. தமிழ் சினிமாவின் சூப்பரான மணி ஹெய்ஸ்ட் திரைப்படங்கள் என்னென்ன? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/10
Photo Credit: IMDB
Share
துல்கர் சல்மான், ரக்ஷன், ரித்து வர்மா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2020ல் வெளியான திரைப்படம் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல்'. காமெடி, த்ரில்லர், ரொமான்ஸ் இதனுடன் மணி ஹெய்ஸ்ட்டும் மக்களை அதிகம் ஈர்த்தது. சூப்பர் ஹிட்டான இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்த்து ரசிக்கலாம்.
2/10
Photo Credit: IMDB
Share
விஜய் சேதுபதியின் திரை வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்திய படம் 'சூது கவ்வும்'. இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் பாபி சிம்ஹா, அசோக் செல்வன், ரமேஷ் திலக், கருணாகரன், எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் கடந்த 2013ல் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. காமெடி கலந்த ஒரு மணி ஹெய்ஸ்ட் படம் பார்க்க வேண்டுமென்றால் இப்படத்தை சோனி லைவ், எம்எக்ஸ் பிளேயர், ஜீ5 ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
3/10
Photo Credit: IMDB
Share
ஆக்ஷன் கிங் அர்ஜுன், கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான சூப்பரான மணி ஹெய்ஸ்ட் திரைப்படம் ஜென்டில் மேன். ஷங்கர் இயக்கத்தில் வெளியான இப்படம் அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தை அமேசான் ப்ரைம் மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடி பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
4/10
Photo Credit: IMDB
Share
2015ல் வெளியான திரில்லர் மணி ஹெய்ஸ்ட் திரைப்படம் 'ராஜதந்திரம்'. பணத்தை கொள்ளையடிக்க பிளான் செய்த கும்பல் அந்த பணத்தை கொள்ளையடித்ததா இல்லையா என்பதே இப்படத்தின் த்ரில்லான கதைக்களம். இப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் பார்க்கலாம்.
5/10
Photo Credit: IMDB
Share
இயக்குநர் தியாகராஜன் குமாரராஜன் இயக்கத்தில் கடந்த 2010ல் வெளியான திரைப்படம் 'ஆரண்ய காண்டம்'. ஆக்ஷன், காமெடி, திரில்லர் கதைக்களத்தில் வெளியான இப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடியில் மிஸ் பண்ணிடாதீங்க.
6/10
Photo Credit: IMDB
Share
நடிகர் பிரசன்னா, சிபி ராஜ், ரம்யா ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'நாணயம்'. மிஸ்ட்ரி, திரில்லர், மணி ஹெய்ஸ்ட் திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் மிஸ் பண்ணிடாதீங்க.
7/10
Photo Credit: IMDB
Share
விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2012ல் வெளியான திரில்லர் சஸ்பென்ஸ் மணி ஹெய்ஸ்ட் திரைப்படம் 'பீட்சா'. இந்த சூப்பர் ஹிட் படத்தை சன் நெக்ஸ்ட் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
8/10
Photo Credit: IMDB
Share
இயக்குநர் மணி ரத்தினம் இயக்கத்தில் 1993ல் வெளியான மணி ஹெய்ஸ்ட் திரைப்பம் 'திருடா திருடா'. இப்படத்தை அமேசான் ப்ரைம் மற்றும் எம்எக்ஸ் பிளேயர் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
9/10
Photo Credit: IMDB
Share
ஹட்ச் வினோத் இயக்கத்தில் வெளியான தரமான மணி ஹெய்ஸ்ட் திரைப்படம் 'சதுரங்க வேட்டை'. வேற எந்த படத்தை பார்க்க தவறினாலும் இப்படத்தை கண்டிப்பா மிஸ் பண்ணிடாதீங்க. டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் இப்படத்தை காணலாம்.


Click it and Unblock the Notifications