OTT Release: இந்த வார ஓடிடி ரிலீஸ்.. என்னென்ன தென்னிந்திய திரைப்படங்கள் பார்க்கலாம்? முழு லிஸ்ட்!
ஒவ்வொரு வாரமும் விதவிதமான திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ஓடிடி தளங்களை அலங்கரித்து வரும் நிலையில் இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகவுள்ள தென்னிந்திய திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
மணிகண்டன் ராமலிங்கம் இயக்கத்தில் எம்ஜே, ஐரா பாலக், சாந்தினி தமிழரசன், மோனா பெட்ரோ, ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திகில் திரைப்படம் 'சாத்தான் தி டார்க்'. மாந்திரீகம், பயமுறுத்தும் தீய ஆவிகள் பின்னணியில் திகில் நிறைந்த ஹாரர் திரைப்படமாகும். இப்படம் நேற்று 20ம் தேதி அமேசான் பிரைம், ஆஹா தமிழ் மற்றும் டென்ட்கோட்டா ஓடிடி தளங்களில் ரிலீஸாகியுள்ளது.
லாவண்யா திரிபாதி, தேவ் மோகன், விகே நரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த காமெடி, ரொமான்டிக் திரைப்படம் 'Sathi Leelavathi'. அசத்தலான காமெடி காட்சிகள் நிறைந்த சூப்பரான லவ் திரைப்படமாகும். இப்படம் நேற்று 20ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளங்களில் ரிலீஸாகியுள்ளது. தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ் மொழியிலும் வெளியாகியுள்ளது.
சித்தார்த் சிவா, டேன் டேவிஸ், பிரமோத் ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான கன்னட க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Shesha 2016'. போலீஸ் அதிகாரிகளின் மறுமுகத்தை காட்டும் த்ரில் படமாகும். இப்படம் நாளை 22ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது. கன்னடம் மற்றும் மலையாள மொழியில் வெளியாகவுள்ளது.
தயான் ஸ்ரீனிவாசன், விஷ்ணு உன்னிகிருஷ்ணன், இந்திரன்ஸ் உள்ளிட்டோர் நடிப்பில் மலையாளத்தில் உருவான காமெடி, ரொமான்டிக், திரில்லர் திரைப்படம் 'Bhishmar'. இப்படம் நாளை 22ம் தேதி அமேசான் பிரைம் மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
மலையாளத்தில் வெளிவந்த காமெடி ரொமான்டிக் ஃபீல் குட் திரைப்படம் 'Madhuvidhu'. இப்படம் நாளை 22ம் தேதி சோனி லைவ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது. மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ரிலீசாகவுள்ளது.
தெலுங்கில் உருவாகியுள்ள காமெடி வெப் தொடர் 'Memu Copulam'. காணாமல் போன சேவல் அதனை சுற்றி நடக்கும் காமெடி கதைக்களம். இத்தொடரின் முதல் சீசன் நாளை 22ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
பிரசாந்த் பாண்டியராஜ் நடிப்பில் உருவாகியுள்ள க்ரைம், திரில்லர் வெப் தொடர் 'வாரண்ட்'. இத்தொடரின் முதல் சீசன் நாளை 22ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications