OTT Release: இந்த வார ஓடிடி ரிலீஸ் தென்னிந்திய திரைப்படங்கள்.. என்னென்ன? முழு லிஸ்ட்!
இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகவுள்ள தென்னிந்திய திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஆக்ஷன், க்ரைம், திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள கன்னட திரைப்படம் 'KD: The Devil'. இப்படம் நாளை 28ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளது.
மிஸ்ட்ரி, ரொமான்டிக், திரில்லர் ஜானரில் வெளிவந்த மலையாள திரைப்படம் 'Faces'. இப்படம் வரும் 29ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
அசத்தலான காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள மலையாள வெப் தொடர் 'Cousins And Kalyanams'. இத்தொடர் வரும் 29ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளிவந்த ஆக்ஷன், திரில்லர் திரைப்படம் 'லீடர்'. இப்படம் வரும் 29ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது. தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
காமெடி கதைக்களத்தில் வெளிவந்த மலையாள திரைப்படம் 'Spa'. இப்படம் நாளை 28ம் தேதி மனோரமா மேக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
தெலுங்கில் உருவாகியுள்ள ஆக்ஷன், காமெடி, திரில்லர் திரைப்படம் 'Jetlee'. இப்படம் கடந்த 25ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசானது. தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
அசத்தலான காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'Brothers and Sisters'. இத்தொடர் இன்று 27ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
தனுஷ் நடிப்பில் வெளிவந்த 'கர' திரைப்படம் நாளை 28ம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் ரிலீசானது.


Click it and Unblock the Notifications