OTT: இந்த வார ஓடிடி ரிலீஸ் தென்னிந்திய திரைப்படங்கள்.. என்னென்ன பார்க்கலாம்?
இந்த வாரம் ஓடிடியில் பார்த்து ரசிக்கவேண்டிய தென்னிந்திய திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
மாபெரும் வெற்றி பெற்ற மோகன்லாலின் 'த்ரிஷ்யம் 3' திரைப்படம் இன்று 18ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
யோகி பாபு நடிப்பில் வெளிவந்த காமெடி ட்ராமா திரைப்படம் 'கெணத்த காணோம்'. இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
தெலுங்கில் உருவாகியுள்ள ஃபேமிலி ட்ராமா வெப் தொடர் 'Raktha Sambandham'. இத்தொடர் இன்று 18ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது
தெலுங்கில் வெளிவந்த ரொமான்டிக் காமெடி திரைப்படம் 'Dhairye Sahase Amrutha'. சேர்ந்து ஓடிப்போக திட்டமிடும் காதல் தம்பதியை பற்றிய ரொமான்டிக் கதை. இப்படம் இன்று 18ம் தேதி ஆஹா வீடியோ ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
பசில் ஜோசப், டோவினோ தாமஸ் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த ஆக்ஷன், காமெடி திரைப்படம் 'அதிரடி'. இப்படம் நாளை 19ம் தேதி சோனி லைவ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது. அதேபோல் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளும் ரிலீசாகவுள்ளது.
தெலுங்கில் வெளிவந்த காமெடி, திரில்லர் வெப் தொடர் 'Saving the Tigers'. இத்தொடரின் மூன்றாவது சீசன் நாளை 19ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது. தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளும் ரிலீசாகவுள்ளது.
மலையாளத்தில் வெளிவந்த காமெடி ட்ராமா திரைப்படம் 'Aashaan'. இந்திரன்ஸ், ஷோபி திலகன், ஜோமன் ஜோதிர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த இப்படம், நாளை 19ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
தெலுங்கில் வெளிவந்த சைக்கலாஜிக்கல் திரில்லர், அதிரடி ஆக்ஷன் திரைப்படம் 'Razor'. இப்படம் நாளை 19ம் தேதி ஆஹா வீடியோ ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications