OTT: ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5, சோனி லைவ் ஓடிடி ரிலீஸ்.. இந்த வாரம் என்னென்ன பார்க்கலாம்?
ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5 மற்றும் சோனி லைவ் ஓடிடி தளங்களில் இந்த வாரம் ரிலீஸாகும் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
பறவைக்கும் விவசாயி ஒருவருக்கும் இடையே இருக்கும் அன்பை கூறும் டாக்குமெண்டரி திரைப்படம் 'The Tale of Silyan'. நாளை 9ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
க்ரைம், மிஸ்ட்ரி கதைக்களத்தில் உருவாகியுள்ள பாக்சிங் வெப் தொடர் 'A Thousand Blows'. இத்தொடரின் முதல் சீசன் நாளை 9ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
அவசரக்கால மருத்துவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட வெப் தொடர் 'The Pitt'. இத்தொடரின் இரண்டாவது சீசன் நாளை 9ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
அட்வென்ச்சர், மிஸ்ட்ரி கதைக்களத்தில் உருவாகியுள்ள பெங்காலி திரைப்படம் 'Joto Kando Kolkatatei'. இப்படம் நாளை 9ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
உண்மையான கிரைம் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட டாக்குமெண்டரி வெப் தொடர் 'Honeymoon Se Hatya'. இத்தொடர் நாளை 9ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
இந்திய சுதந்திரத்தை பற்றிய டாகுமெண்டரி வெப் தொடர் 'Freedom at Midnight'. இத்தொடரின் இரண்டாவது சீசன் நாளை 9ம் தேதி சோனி லைவ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
சைக்கலாஜிக்கல் ஹாரர், திரில்லர், மிஸ்ட்ரி திரைப்படம் 'Weapons'. அமேசான் பிரைம் தளத்தில் ரிலீஸான இப்படம், இன்று 8ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸாகியுள்ளது.
அதிரடி ஆக்ஷன், அட்வென்ச்சர், சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 'Tron: Ares'. ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸாகியுள்ளது.


Click it and Unblock the Notifications