OTT: இந்த வார ஓடிடி ரீலிஸ்.. தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களின் லிஸ்ட்!
இந்த வாரம் ஓடிடி தளங்களில் ரிலீஸாகவுள்ள தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்கள், வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தெலுங்கில் உருவாகியுள்ள மிஸ்ட்ரி, திரில்லர் வெப் சீரிஸ் Viraatapalem: PC Meena Reporting. 90களில் கிராம் ஒன்றில் புதிதாக திருமணம் செய்து கொண்ட பெண்கள் பலர் திருமணமாகி இரண்டு மூன்று நாட்களிலேயே மர்மமான முறையில் இறந்துவிடுகின்றனர். என்ன காரணம்? அமானுஷ்ய சக்திகளால் இந்த உயிரிழப்பு ஏற்படுகிறதா? என்பதே இத்தொடரின் த்ரில் கதைக்களம். இத்தொடர் இன்று 26ம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் வெளியாகியுள்ள அனிமேஷன், காமெடி, ஃபேண்டஸி திரைப்படம் Lovely. பேசும் ஈயுடன் நட்பாக பழகும் ஒரு இளைஞனின் கதை. வித்தியாசமான கதைக்களத்தில் தியேட்டரில் வெளியான இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் வெளியாகியுள்ள அசத்தல் காமெடி திராய்ப்படம் Aap Kaise Ho. இளைஞர்களின் பேச்சுலர் பார்ட்டியில் ஏற்படும் காமெடி கலேபரங்களே இப்படத்தின் அசத்தலான காமெடி கதைக்களம். இப்படம் நாளை 27ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
கடந்த மார்ச் மாதம் தியேட்டரில் ரிலீஸான ஃபேமிலி ட்ராமா காமெடி திரைப்படம் Pariwar. படுத்தப்படுகையாக இருக்கும் அப்பாவின் கை விரலில் அணிந்துள்ள வைர மோதிரத்துக்காக அடித்துக்கொள்ளும் நான்கு மகன்களின் கதையே இப்படத்தின் காமெடி கதைக்களம். இப்படம் கடந்த 24ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியானது.
மலையாளத்தில் வெளியான ஆக்ஷன், த்ரில் திரைப்படம் Azadi. பெரிய சிக்கலில் சிக்கிக்கொண்ட பெண்ணை அவரின் கணவரும், அப்பாவும் எப்படி மீட்டு கொண்டு வருகின்றனர் என்பதே இப்படத்தின் த்ரில் கதைக்களம். இப்படம் நாளை 27ம் தேதி மனோரமா மாக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
வரலக்ஷ்மி சரத்குமார், சுஹாசினி, ஸ்ருதி ஹரிஹரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திராய்ப்படம் 'தி வெர்டிக்ட்'. அமெரிக்காவில் பணக்கார பெண்மணியான சுஹாசினி மூச்சு திணறலால் இறந்துவிடுகிறார்.. அப்போது அவருடன் இருந்தது ஸ்ருதி ஹரிஹரன் மட்டுமே. இது கொலையா? அல்லது இயற்கை மரணமா? என்பதே இப்படத்தின் த்ரில் கதைக்களம். இப்படம் இன்று 26ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகவுள்ளது.


Click it and Unblock the Notifications