Netflix OTT: நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ள சுவாரசிய திரைப்படங்கள்.. இந்த வாரம் என்னென்ன பார்க்கலாம்? லிஸ்ட்!
இந்த வீக் எண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கடந்தாண்டு வெளிவந்த க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Dead Man's Wire'. உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த பயோகிராஃபி படம் வரும் 29ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
கால்பந்து விளையாட்டை பற்றிய டாக்குமெண்டரி மினி வெப் தொடர் 'Brazil '70: The Third Star'. இத்தொடர் வரும் 29ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
பிரபல டென்னிஸ் விளையாட்டு வீரர் ரஃபேல் நடால் பற்றிய பயோகிராஃபி வெப் தொடர் 'Rafa'. இத்தொடரின் முதல் சீசன் வரும் 29ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
உலக பிரபலமான கால்பந்து கோல் கேப்பார் எமி மார்டினெஸ் பற்றிய டாக்குமெண்டரி திரைப்படம் 'Emi Martinez : The Kid Who Stops Time'. இப்படம் நாளை 28ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
தனுஷ் நடிப்பில் வெளிவந்து கலவையான விமர்சனங்கள் பெற்ற திரைப்படம் 'கர'. மக்களிடையே சுமாரான வரவேற்பு பெற்ற இப்படம், நாளை 28ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள அனிமேஷன் மினி வெப் தொடர் 'My Two Cents'. இத்தொடரின் முதல் சீசன் இன்று 27ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசானது.
காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள அனிமேஷன் வெப் தொடர் 'Sheriff Labrador'. இத்தொடர் கடந்த 25ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசானது.


Click it and Unblock the Notifications