OTT: இந்த வார ஓடிடி ரிலீஸ்.. வரிசைக்கட்டிய தென்னிந்திய திரைப்படங்கள்.. முழு லிஸ்ட்!
ஒவ்வொரு வாரமும் விதவிதமான படங்கள் ஓடிடி தளங்களில் ரிலீசாகி வரும் நிலையில் இந்த வாரம் ஓடிடி தளங்களில் ரிலீசாகவுள்ள தென்னிந்திய திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஆக்ஷன், அட்வென்ச்சர், ட்ராமா திரைப்படம் 'ஜாக்கி'. மதுரை மக்களின் பாரம்பரிய விளையாட்டான கிடா சண்டை பற்றிய கதைக்களம். இப்படம் அமேசான் பிரைம் மற்றும் டென்ட்கோட்டா ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
தெலுங்கில் வெளிவந்த காமெடி ட்ராமா ஃபீல் குட் திரைப்படம் 'Om Shanti Shanti Shantihi'. இப்படம் ஆஹா வீடியோ ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
தெலுங்கில் வெளிவந்த ரொமான்டிக் திரைப்படம் 'Charitha Kamakshi'. இப்படம் இன்று 5ம் தேதி ETvWin ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
அபிஷன் ஜீவிந்த், அனஸ்வர ராஜன் நடிப்பில் வெளிவந்த ஃபீல் குட் திரைப்படம் 'வித் லவ்'. விமர்சனத்திலும், வசூலிலும் செம ஹிட்டான இப்படம், நாளை 6ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பெரும் எதிர்பார்ப்புடன் ரிலீசாகவுள்ளது.
கார்த்தி நடிப்பில் வெளிவந்த 'வா வாத்தியார்' படத்தின் தெலுங்கு டப்பிங் திரைப்படம் 'Annagaru Vostaru'. இப்படம் நாளை 6ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த காமெடி ட்ராமா பான் இந்தியா திரைப்படம் 'Gandhi Talks'. இப்படம் நாளை 6ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீசாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
தெலுங்கில் உருவாகியுள்ள க்ரைம், திரில்லர் வெப் தொடர் 'Vikram On Duty'. இத்தொடர் நாளை 6ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது. தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி, மராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் ரிலீசாகவுள்ளது.
இயக்குநர் விஜய குமரன் இயக்கத்தில் திலீபன் நடிப்பில் வெளிவந்த ஹாரர் திரைப்படம் 'க்ராணி'. இந்த திகில் படம், நாளை 6ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
சின்னத்திரை நடிகர் சரவணா விக்ரம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்த திரைப்படம் 'டியர் ராதி'. ரொமான்டிக், திரில்லர் கதைக்களத்தில் வெளிவந்த இப்படம், நாளை 6ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications