OTT : இந்த வார ஓடிடி ரிலீஸ்.. பார்க்கவேண்டிய தென்னிந்திய திரைப்படங்கள் என்னென்ன? முழு லிஸ்ட்!
இந்த வாரம் ஓடிடி தளங்களில் ரிலீசாகவுள்ள தென்னிந்திய திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
மலையாளத்தில் வெளிவந்த காமெடி, ஹாரர் திரைப்படம் 'Kanimangalam Kovilakam'. விடுதியில் தங்கியிருக்கும் கல்லூரி இளைஞர்கள் எதிர்கொள்ளும் அமானுஷ்ய சக்திகளை பற்றிய திரைப்படம். இப்படம் நாளை 10ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
மலையாளத்தில் வெளிவந்த காமெடி, ரொமான்டிக் திரைப்படம் 'Haal'. இந்த வீக் எண்டுக்கு ஏற்ற கலக்கலான ரொமான்டிக் படம் சன் நெக்ஸ்ட் மற்றும் மனோரமா மேக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
சுபாஸ்க் செல்வம், முனிஸ்காந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'காக்கி சர்க்கஸ்'. சிறைக்குள் இருக்கும் சாமி உண்டியலில் இருக்கும் பணத்தை திருடியது யார் என்ற போலீஸ் விசாரணையின் காமெடி கதையே இப்படத்தின் கதைக்களம். இப்படம் நாளை 10ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
இயக்குநர் அவினாஷ் பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்த ஃபீல் குட் என்டிமென்டல் திரைப்படம் 'நாங்கள்'. இப்படம் நாளை 10ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் 'தாய் கிழவி'. வசூலிலும், விமர்சனத்திலும் அமோக வரவேற்பு பெற்ற இப்படம் நாளை 10ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications