OTT: இந்த வார ஓடிடி ரிலீஸ்.. பார்க்கவேண்டிய தென்னிந்திய திரைப்படங்கள் என்னென்ன? முழு லிஸ்ட்!
ஒவ்வொரு வாரமும் விதவிதமான புது படங்கள் ஓடிடி தளங்களில் ரிலீஸாகி வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஹார்ட் பீட் வெப் சீரிஸ் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாடினி குமார், குரு லட்சுமணன். இவர்கள் இருவரும் இணைந்து ஹார்டிலே பேட்டரி என்ற புதிய வெப் தொடரில் நடித்துள்ளனர். இத்தொடரை சதாசிவம் செந்தில் ராஜன் இயக்கியுள்ளார். இத்தொடர் கடந்த 16ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸானது.
தெலுங்கில் உருவாகியுள்ள காமெடி ரொமான்டிக் திரைப்படம் 'Raju Weds Rambai'. இப்படம் இன்று 18ம் தேதி ETvWin ஓடிடி தளத்தில் ரிலீஸானது.
நடிகை பார்வதி நாயர் இரட்டை வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் 'உன் பார்வையில்'. பாலிவுட் ஒளிப்பதிவாளர் கபீர் லால் இயக்கியுள்ளார். நடிகர் கணேஷ் வெங்கட்ராம் உட்பட பலர் நடித்துள்ளனர். தனது சகோதரியை கொலை செய்தவர்களை பழிவாங்கும் கதைக்களமாக உருவாகியுள்ளது. இப்படம் நாளை 19ம் தேதி நேரடியாக சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ளது.
தெலுங்கில் உருவாகியுள்ள ரொமான்டிக், காமெடி திரைப்படம் 'Premante'. தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு நாளை 19ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாகவுள்ளது.
தெலுங்கில் உருவாகியுள்ள திரில்லர், சயின்ஸ் பிக்ஷன், மிஸ்ட்ரி வெப் தொடர் 'Nayanam'. இத்தொடர் நாளை 19ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ளது.
நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'Pharma'. மருந்துகளை விற்பனை செய்யும் பிரதிநிதியாக நிவின் பாலி நடித்துள்ளார். அதில் அவர் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன? என்பதே இத்தொடரின் திரில்லர் கதைக்களம். மலையாளம் உட்பட தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இத்தொடர் நாளை 19ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸாகவுள்ளது.
மம்மூட்டி நடிப்பில் உருவாகியுள்ள காமெடி, திரில்லர் திரைப்படம் 'Dominic and the Ladies' Purse'. இப்படம் நாளை 19ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ளது.
தெலுங்கில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் 'Divya Drishti'. இப்படம் நாளை 19ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ளது.


Click it and Unblock the Notifications