OTT: இந்த வார ஓடிடி ரிலீஸ் தென்னிந்திய திரைப்படங்கள்.. எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
இந்த வாரம் ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ள தென்னிந்திய திரைப்படங்கள் என்னென்ன? எந்த படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, ரவி மோகன், அதர்வா ஆகியோர் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸான திரைப்படம் 'பராசக்தி'. இந்தி திணிப்பை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் தியேட்டரில் ரிலீஸாகி 25 நாட்கள் கடந்த நிலையில் வரும் பிப்ரவரி 7ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
தெலுங்கில் வெளிவந்த ஆக்ஷன் திரைப்படம் 'Nilakanta'. நாயகனாக மகேந்திரனும், வில்லனாக ராம்கியும் நடித்துள்ள இப்படம், நாளை 6ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது. தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ் மொழியிலும் வெளியாகவுள்ளது.
பிரபாஸ், சஞ்சய தத், நிதி அகர்வால் நடிப்பில் ஆக்ஷன், காமெடி, ஃபேண்டஸி, ஹாரர், ரொமான்ஸ், திரில்லர் ஜானரில் வெளிவந்த தெலுங்கில் திரைப்படம் 'The Raja Saab'. இப்படம் நாளை 6ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது. தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
பொன்ராம் இயக்கத்தில் சண்முகபாண்டியன், சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஆக்ஷன் திரைப்படம் 'கொம்புசீவி'. இப்படம் நாளை 6ம் தேதி டென்ட்கோட்டா ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ளது.
தெலுங்கில் வெளிவந்த ரொமான்டிக் திரைப்படம் 'Psych Siddhartha'. இப்படம் நேற்று 4ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீஸானது.
தெலுங்கில் வெளிவந்த கலக்கலான ரொமான்டிக் எமோஷனல் திரைப்படம் 'Nari Nari Naduma Murari'. இப்படம் நேற்று 4ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸானது.


Click it and Unblock the Notifications