OTT: இந்த வார ஓடிடி ரிலீஸ்.. பார்த்து என்ஜாய் பண்ணவேண்டிய தென்னிந்திய திரைப்படங்கள்!
இந்த வாரம் ஓடிடி தளங்களில் ரிலீஸாகவுள்ள தென்னிந்திய திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
பிக் பாஸ் பூர்ணிமா ரவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் 'யெல்லோ'. காமெடி, காதல் என பல எமோஷன்ஸ் நிறைந்த இப்படம் அமேசான் பிரைம் தளத்தில் ரிலீஸாகியுள்ளது.
தெலுங்கில் வெளிவந்த ஃபீல் குட் காமெடி ரோடு டிரிப் திரைப்படம் 'Jigris'. இப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
நடிகை வர்ஷா பொல்லம்மா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த திரில்லர் வெப் தொடர் 'Constable Kanakam'. இத்தொடரின் முதல் சீசன் ஓடிடி பிரியர்களை ஈர்த்த நிலையில் இரண்டாவது சீசன் ETvWin ஓடிடி தளத்தில் இன்று ரிலீஸாகியுள்ளது.
உண்மையான கிரைம் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட டாக்குமெண்டரி திரைப்படம் 'Silent Screams: The Lost Girls of Telangana'. தெலுங்கில் வெளிவந்த இப்படம், இன்று 8ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ரிலீஸாகியுள்ளது.
கன்னடத்தில் வெளிவந்த கிரைம், திரில்லர் டிராமா திரைப்படம் 'Radheyaa'. இப்படம், இன்று 8ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ரிலீஸாகியுள்ளது.
கவின், ஆண்ட்ரியா நடிப்பில் வெளிவந்த மணி ஹெயிஸ்ட் திரைப்படம் 'மாஸ்க்'. கலவையான விமர்சனங்கள் பெற்ற இப்படம், நாளை 9ம் தேதி ஜீ5 மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ளது.
விமல், யோகி பாபு, மஹிமா குப்தா, ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரில்லர் திரைப்படம் 'மகாசேனா'. தியேட்டரில் ரிலீஸாகி கலவையான விமர்சனங்கள் பெற்ற இப்படம், நாளை 9ம் தேதி சிம்பிளி சவுத் தளத்தில் ரிலீஸாகவுள்ளது.
நடிகை கீதா கைலாசம் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் 'அங்கம்மாள்'. திரைப்பட விழாவில் விருது வென்ற இப்படம், தியேட்டரிலும் ரிலீஸாகி நல்ல வரவேற்பு பெற்றது. இப்படம் நாளை 9ம் தேதி சன் நெக்ஸ்ட் மற்றும் சிம்பிளி சவுத் ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ளது
பாலய்யா நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படம் 'Akhanda 2'. இப்படத்தின் முதல் பாகம் வேற லெவல் ஹிட்டானதை தொடர்ந்து இரண்டாம் பாகமும் ரிலீஸாகி அமோக வரவேற்பு பெற்றது. அந்த வகையில் இப்படம், நாளை 9ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாகவுள்ளது.


Click it and Unblock the Notifications