OTT: இந்த வார ஓடிடி ரிலீஸ்.. பார்க்கவேண்டிய தென்னிந்திய திரைப்படங்கள் என்னென்ன? முழு லிஸ்ட்!
இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகவுள்ள தென்னிந்திய திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சிம்ரன், ஆதி, லட்சுமிமேனன் நடிப்பில் வெளிவந்த ஹாரர், திரில்லர் திரைப்படம் 'சப்தம்'. இப்படம் ஜீ5 ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் ஆக்ஷன், திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'காட்டான்'. இப்படம் நாளை 27ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
சுரேந்தர் இயக்கத்தில் ஆகாஷ், ஹரிருத்ரன் நடிப்பில் வெளிவந்த ரொமான்டிக் ட்ராமா திரைப்படம் 'மாயபிம்பம்'. இப்படம் நாளை 27ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
ராஜீஷா விஜயன் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த காமெடி, சயின்ஸ் பிக்ஷன், திரில்லர் திரைப்படம் 'Masthishka Maranam'. இப்படம் நாளை 27ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
ஜோஜு ஜோர்ஜ், பிஜு மேனன் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Valathu Vashathe Kallan'. இப்படம் மனோரமா மேக்ஸ் மற்றும் சிம்ப்ளி சவுத் ஓடிடியில் பார்க்கலாம்.
தெலுங்கில் வெளிவந்த ரொமான்டிக் ட்ராமா திரைப்படம் 'MaNannaKatha'. இப்படம் வரும் 29ம் தேதி ETV WIN ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications