OTT: இந்த வார ஓடிடி ரிலீஸ்.. மளமளவென குவிந்த தென்னிந்திய திரைப்படங்கள்.. முழு லிஸ்ட்!
இந்த வாரம் ஓடிடி தளங்களில் ரிலீஸாகவுள்ள தென்னிந்திய திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
அனுபமா பரமேஸ்வரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் 'லாக் டவுன்'. இந்த திரில்லர் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
மலையாளத்தில் வெளிவந்த காமெடி, க்ரைம் திரைப்படம் 'Pennu Case'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸாகியுள்ளது.
பிரியங்கா அருள் மோகன் நடிப்பில் உருவாகியுள்ள அட்வென்ச்சர் ட்ராமா திரைப்படம் 'மேட் இன் கொரியா'. இப்படம் இன்று 12ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
தெலுங்கில் வெளிவந்த திரில்லர் ட்ராமா திரைப்படம் 'Nawab's Cafe'. இப்படம் இன்று 12ம் தேதி ETvWin ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவான காமெடி ரொமான்டிக் திரைப்படம் 'பூக்கி'. அஜய் திஷான் நடிப்பில் வெளிவந்த இப்படம், நாளை 13ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
தினேஷ், கலையரசன், மன்சூர் அலி கான் நடிப்பில் வெளிவந்த திரில்லர் திரைப்படம் 'கருப்பு பல்சர்'. இப்படம் நாளை 13ம் தேதி டென்ட்கோட்டா ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
நடிகை தன்ஷிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படம் 'யோகிடா'. இப்படம் நாளை 13ம் தேதி ஆஹா தமிழ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
தீனா, ராமச்சந்திரன் துரைராஜ், மைமி கோபி நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த திரைப்படம் 'ஃப்ரைடே'. இந்த திரில்லர் திரைப்படம் நாளை 13ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
எருமை சாணி விஜய் குமார் நடிப்பில் கலக்கலான காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'ரிசார்ட்'. இப்படம் நாளை 13ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது. தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications